பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களால் அறிபவை 199 பஞ்சமம் பாடி யாடும் தெள்ளியார் கள்ளந் தீர்ப்பார் (4.293) என்பது திருநாவுக்கரசர் பெருமானின் திருமொழி. அஞ்சைக் களத்து அப்பனைப் போற்றும் நிலையில், 'வெறுத்தேன் மனைவாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழைகாதுடை வேதியனே (7.4:8) என்னும் தெளிவுடைய சிந்தையினராகிய தம்பிரான் தோழர் அஞ்சைக் களத்தப்பன்பால் விடை பெற்றுக் கயிலையை நோக்கிச் செல்லும்பொழுது சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுட் சிவமுமாகிய (4.48:5) நிலையில் சிவபரம் பொருளைச் சிந்தையில் இருத்தும் நிலையில் பாடியருளிய "தானெனை முன்படைத்தான்' என்ற பதிகம் பஞ்சமம் என்ற பண்ணில் அமைந்திருத்தல் கண்டு மகிழத்தக்கதாகும். இயல் நலமும் இசை நலமும் ஒருங்கு வாய்ந்த இனிய பாடல்களை இசைப்பா எனவும், இசையளவுபா எனவும் இருவகைப் படுத்திக் கூறுதல் மரபு. புலவர்களால் முதற் கண் இயற்றப்பெறும்பொழுதே இயல் வளமும் இசை நலமும் ஒருங்கு அமையப் பாடப்பெற்ற இனிய பாடல்களே 'இசைப்பா' என்று வழங்கப்பெறும், புலவர்களால் முதற் கண் இயல் அளவில் பாடப்பெற்றுப் பின்னர் இசை வல்லாரால் இசையமைத்துக் ச்ொள்ளுதற்கேற்ற சீர் நலம் வாய்ந்த பாடல்களை இசையளவுபா' என்று வழங்குவர். தேவார ஆசிரியர்கள் மூவரும் அருளிய திருப்பதிகங்கள் அவர் தம் திருவாயிலிருந்து வெளிவரும் போதே பண்ணார் இன் தமிழாய் வெளிப்பட்ட இன்னிசைப் பாடல்கள்; இவை 1. சிலம்பு-கடலாடு-35 அடியார்க்கு நல்லார் உரை