பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தம்பிரான் தோழர் மேற்குறிப்பிட்ட முதல் வகையில் அடங்கும். இப்பதிகங் களைப் பண் சுமந்தப் பாடல்’ எனச் சான்றோர்கள் போற்றும் மரபும் உண்டு. தம்பிரான் தோழர் நல்லிசை ஞானசம்பந்தரும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலைகளை இயல் இசை நலம் தோன்ற நாடொறும் இறைவன் திருமுன் ஒதி மகிழ்பவர். இதனை, நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்வியவே சொல்லி யேத்துகப்பானை (7 51:5) என வரும் அவர்தம் திருவாக்காலேயே அறியலாம். தம்பிரான்தோழர் அருளிய திருப்பதிகங்களும் பண்ணார்ந்த பாடல்களாகும். இதனைப், பண்பயிலும் பத்துமிவை' (1.6:11), ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் (7,29:10) 'ஏழிசை யின்றமிழால் இசைந்தேத்திய பத்து" (7.100:10) என வரும் இவர்தம் வாய்மொழிகளாலேயே அறியலாம். இயல் இசை நாடகம் என்னும் மூன்று துறைகளிலும் வளம் பெற்று வளர்ந்தது தமிழ் மொழி. இம்மொழி பழத்தினில் சுவையும், கண்ணிடை மணியும் போன்று இசை வளர்ச்சிக்கு இன்றியமையாததாய் பண்ணிடையே கலந்து நின்று இசைக்குச் சுவையும் ஒளியும் தரவல்லதாகும். தெலுங்கு மொழி பாட்டிற்கு இசைந்து வரும் மொழி என்பதை சுந்தாத் தெலுங்கில் பாட்டிசைத்து" என்று கூறி யுள்ளதை நாம் அறிவோம். தம்பிரான் தோழரும், 2. பண் சுமந்த பாடற் பரிசு படைத்தரும் என்பது மணவாசகர் திருவாக்கு (திருவா. திருவம்மானை-8) 3, பா. க தே, கீ. பாரததேசம்-5