பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களால் அறிபவை 201 பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினில் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் 7.29:6) என்று இசைக்கு இறைவனை உவமித்துப் போற்றுதலால் தமிழும் ஏற்ற மொழி என்பதனை அறியலாம். ஞானத் திரளாய் நிற்கும் இறைவன் பண்ணாகவும் பண்ணகத்தே இனிய ஓசையுடைய தமிழின் உருவாகவும் திகழ்கின்றான். இதனை ஏழிசையாய் இசைப்பயனாய் (151:10), பாட்ட கத்து இசையாகி நின்றானை’ (7.62.3) என்பன போன்ற சுந்தரரின் வாய்மொழிகளாயே அறியலாம். சுந்தரர் தமிழின் பின்னணி : காழிப் பிள்ளையாரும் நாவுக்கரசரும் வாழ்ந்த காலத்தில் தமிழகம் அயலவர் ஆட்சி யிலும். புறச்சமயச் சூழ்ச்சியிலும் அகப்பட்டுத் தன் ஆற்றல் குன்றியிருந்தது; ஆனால் இப்பெருமக்கள் இருவர் முயற்சியி னால் தமிழ் மக்களின் அச்சம் நீங்கியது. அவர்கள் வீறு கொண்டு எழுந்தனர். தமிழ்நாடெங்கும் செந்தமிழும் சிவ தெறியும் பண்டுபோல் தழைத்தோங்கின. பல்லவர் முதலிய அயல் வேந்தரும் தமிழராகவும் சைவராகவும் மாறினர். தமிழ் வேந்தர் மூவரும் ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தனர். தமிழ் மக்களும் உரிமையுடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டது. இங்ங்னம் தமிழகம் அமைதியுற்றுச் சீரும் சிறப்பும் கொண்டு திகழ்ந்த காலத்தில் தோன்றியவர் நம்பியாரூரர். ஆதலால் இவருடைய திருப்பதிகங்களில் சமணம், பெளத்தம் முதலிய புறச்சமயக் கண்டனங்கள் ஏற்படுவதற்கு இடம் இல்லாது போயிற்று. காவலூர்ப்பெருமான் அருளிய திருப்பதிகங்கள் காழி வேந்தர் அருளிய திருப்பதிகங்களைப் போன்று உளங் குளிர்ந்த போதெல்லாம் உகந்து பாடும் உவகைத் திறம் அமைந்தவை. நாவுக்கரசரின் திருமொழிகளைப் போன்று