பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தம்பிரான்)தோழர் தன்பிழை நினைந்து ஏசறும் இரங்கலுணர்வையும் கொண்டவை. தம்பிரான் தோழரின் பாடல்கள் தம்முன் தோன்றிய சம்பந்தர், நாவரசர் இவர்தம் திருப்பாடல் கட்கு விளக்கவுரையாகவும் கருத்துரையாகவும் அமைந்து திகழ்வதைக் காணலாம். நம்பியாரூரர் இறைவனால் தடுத்தாட்கொள்ளப் பெற்றவர்; தம்பிரான் தோழராகவும் திகழ்ந்தவர். ஆகவே இவர் அருளிய திருப்பதிகங்களில் பெரும்பாலன, இறைவனை உயிர்த் தோழனாக எண்ணி அவனுடன் அன்பில் நயந்து விளையாடியும், வன்கண்மையுடன் ஊடி இடித்துக் கூறியும், தமக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்களனைத் தையும் அப்பெருமான்பால் வேண்டிப்பெறும் உரிமை யுணர்வைப் புலப்படுத்துவனவாகவும் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். 'நலியேன் ஒருவரை நான் உமையல் லால் நாட்டியத் தான்குடி நம்பீ!' (7.15:8) என்ற தொடர் எவ்வுயிர்க்கும் உயிராக விளங்கும் இறைவன் ஒருவனையே நலிந்து வேண்டிப் பெற முயலும் தம்பிரான் தோழரின் தோழமைத் திறத்தை செவ்விதின் விளக்குவதை அறியலாம். நாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்களில் திருத்தாண்டக யாப்பு அவர்க்கே உரிய முறையில் சிறந்து விளங்குவதைப் போன்று, தம்பிரான் தோழர் அருளிய பதிகங்களில் தக்கேசி பண்ணில் அமைந்த திருப்பதிகங்கள் படிப்போருடைய உள்ளத்தை நெகிழ்விக்கும் தனிச்சிறப்புடையவையாகத் திகழ்கின்றன: இவை இவருக்கே உரிய சொல் நடையில் அமைந்துள்ளதையும் கண்டு மகிழலாம். இறைவனைக் கண்ணாரக் கண்டும், அவனருளால் பல நலன்களைப் பெற்றும் மகிழ்ந்த நாவலூரர் அம்மகிழ்ச்சியைப் பல்வேறு முறையில் புலப்படுத்தும் முறையில் அமைந்த திருப்பதிகங்கள் படிப் போரின் நெஞ்சத்தைக் கசிந்துருகச் செய்ய வல்லவை: தரம்