பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களால் அறிபவை 203 பெற்ற சிற்றின்பமே பேரின்பமாக முற்ற வரும் தன்மையில் வாழ்ந்த இவர்தம் வாழ்க்கையை வெளிப்படுத்தும் பதிகங் கள் உலக வாழ்வில் மண்டிக் கிடக்கும் நம்மை வியக்கவைப் பவை. பலசெய்திகள்: தம்பிரான் தோழரின் திருப்பதிகங்களை ஆழ்ந்து கற்குங்கால் பல செய்திகள் தமக்குப் புலனாகின்றன. அவற்றைச் சிறிது காண்போம். நால் வகை நெறிகள்: இறைவன் திருவருளை உலக மக்கள் அனைவரும் பெறுவதற்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்வகை நன்னெறிகளைக் காட்டியுள்ளனர் சிவஞானச் செல்வர்கள். இந்த நால்வகை நெறிகளும் தேவாரப் பதிகங்களில் சுட்டப் பெற்றுள்ளன. சரியையாவது, ஆகமங்களில் விதித்தவாறு திருக் கோயிலில் அமைந்துள்ள இறைவனது உருவத்திருமேனியைப் பொருள் என்று உணர்ந்து திருக்கோயிலில் அலகிடல், மெழு கல், பூக்கொய்து நறுமலர்மாலை தொகுத்தல், புகழ்ந்து பாடுதல் முதலிய உடம்பின் தொழில்களாக நிகழ்வது. இதனைத் தாத மார்க்கம் (தொண்டு நெறி) எனவும் வழங்குவர். இந்த இயல்பு நாவுக்கரசர் பெருமானிடத்து விளங்குதலை அன்னார் வரலாற்று நிகழ்ச்சிகளில் காணலாம். இதனால் அடையும்பலன், சாலோகம். சாலோகம், இறைவன் உலகினை அடைதல். இது பதமுத்தி" எனப்படும். 4. பதமுத்தி: வித்தியா தத்துவங்கள் ஏழிலும் உள்ள சீகணடபுவனம் முதலிய உருத்திர உலகங்களை அடைதல் பதமுத்தி. குணருத்திரர்_உலகத்தை அடைதலும் ஒரு வகைப் பதமுத்தியேயாகும், இவ்வுருத்திர உலகமும் ஒரோவழி சிவலோகம்’ ஆகும். (முத்திபற்றிய விவரங்களை இவ்வாசிரியர் எழுதியுள்ள சைவ சமய விளக்கு' என்ற நூலில் 16. பயன்யல் என்ற பகுதியில் கண்டு தெளிக.)