பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oë4 தம்பிரான் தோழர் இtயையாவது, திருக்கோயிலில் எழுந்தருளிய சிவலிங்கத் இருவுருவாகிய அருவுருவத் திருமேனியே பொருள் என்று உணர்ந்து புறத்தேயும் அகத்தேயும் பூசனை புரிந்து வழி படுதல். இதனை நம்பியாரூரர், அகத்தடிமை செய்யும் அந்தணன் தான் அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான் (19.6) முப்போதும் திருமேனி திண்டுவார்க்கடியேன். (7.39:10) என்று முறையே அழகார் திருப்புத்தூர் பதிகத்திலும், பொதுப்பதிகத்திலும் கூறியுள்ளதைக் காணலாம். இதனை சற்புத்தி மார்க்கம் மகன்மை நெறி, என வழங்குவர். இந்த இயல்பு ஞானசம்பந்தப்பெருமானிடத்து விளங்குதலை அவர்தம் வரலாற்று நிகழ்ச்சிகளால் அறியலாம். இதனால் அடையும் பலன் சாt:ம் என்னும் பதமுத்தி, சாமீபம்இறைவன் அருகு இருத்தல். யோகமாவது, இறைவனுடைய உருவம், அருவம், அரு அருவம் என்னும் மூவகைத் திருமேனிகளுள் மிக நுண்ணிய அருவுருவத் திருமேனியே பொருளெனவும், உருவமும் அரு வமும் இத்திருமேனியை வழிபடுவதற்கு முதலும் முடிவுமா யமைத்த திருமேனிகள் எனவும் உணர்ந்து இறைவனை வழி படுவது. இதனை நம்பியாரூரர். ஒர்த்தனன் ஒர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள். (7.45:4) தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்