பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களால் அறிபவை 205 மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துள்ளே ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகட்கே. (7.45:9) என்று திருவாமாத்துரர் பதிகத்தில் கூறுவதைக் காணலாம். இந்நெறிவைச் சகமார்க்கம் தோழமை நெறி) என்று வழங் குவர். இந்த இயல்பு நம்பியாரூரிடத்து விளங்குதலை அவர் தம் வரலாற்று நிகழ்ச்சிகளால் அறியலாம். இதனால் அடை யும் பலன் சாரூபம் என்னும் பதமுத்தி சாரூபம்-இறைவன் உருவினைப் பெறுதல் : ஞானமாவது, மேற்குறித்த வண்ணம் உருவம், அரு வுருவம், அருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் முறையே வழிபட்டுவர ஆன்மாவின்கண் நிகழும் பக்குவ முதிர்ச்சி யாலே உள்ளவாறு உணர்வு விளங்கி, உலகெலாம் கடந்தும் அணுத்தொறும் விரவியும் என்றும் உள்ள உண்மை அறி வின்பமே இறைவனது திருவுருவாம் என்றும், உருவம் அரு வுருவம், அருவம் ஆகிய மூன்றும் பருமை வழியே துண்மை யினை உணர்தல் என்னும் முறைப்படி ஞானத்திரளாய் நின்ற இறைவனை உணர்தற்பொருட்டும் வழிபத்தற் பொருட்டும் கொண்ட திருமேனிகளே என்றும் இவ்வாறு உணர்ந்து முன்குறித்த உடம்பின் தொழில், மனத்தின் தொழில் இரண்டினையும் கைவிட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் ஆகிய அறிவுத்தொழில் மாத் திரையால் இறைவனை வழிபடுதல், இதனை நம்பியாரூரர், நந்தார் புடை ஞ்ானன் (7.30:1) ஞான மூர்த்தி நட்டமாடி (7.81:1) என்று முறையே சேர்ச்சரத்துப் பதிகத்திலும், திருக்கழுக் குன்றப் பதிகத்திலும் கூறியுள்ளதைக் காணலாம். இந் நெறியைச் சன்மார்க்க (இரண்டற்று ஒன்றும் நெறி)