பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23; தம்பிரான் தோழர் சிவாலயங்களில் இறைவன் அருவுருவத் திருமேனியாகிய" சிவலிங்கத் திருமேனியுடன் எழுத்தருளியிருக்கும் கருவறை வீளை (மூலஸ்தானம்) என்று வழங்குவது மரபு. எல்லாத் திருக்கோயில்களிலும் சிவலிங்கத் திருமேனியுடன் இறைவன் விற்றிருந்தருளும் சிறப்புடைய அருள் நிலையத்திண்ை. மூலட்டானம் எனப் பொதுவாக வழங்கினாலும், திரு வாரூர்த் திருக்கோயிலுள் புற் றிடங் கொண்ட பெருமான் எழுத்தருளிய இடத்தையே திருமூலட்டானம் என தாவுக்கரசர் தம் பதிகங்களில் சிறப்பாகக் குறித்துள்ளார். இங்ஙனமே தில்லைப் பெருங்கோயிலில் சிவலிங்கத் திருமேனி அமைத்த நிலையத்தைத் திருமூலட்டானம்’ எனச் சிறப் காக வழங்கும் மரபும் உண்டு. பெரும்பற்றப் புவியூர் மூலட் டானத்தார் (6, 51: 6) என்ற அப்பர் பெருமானின் திருமொழியால் இஃது அறியப் படும். பாடல் பெற்ற சில தலங்களில் ஊர்ப்பெயரும், அவ்வூரில் அமைந்த கோயிற் பெயரும் வேறு வேறு குறிக்கப்பெற். துள்ளன. (எ.டு) காவிரிப்பூம்பட்டினம்-திருச்சாய்க்காடு, காவிரிப்பூம்பட்டினம்-திருப்பல்லவனீச்சரம், திருப்பனந்தாள் தாடகையிச்சரம், கொட்டையூர் கோடீச்சரம்-கோவந்த புத்துர் - விசயமங்கை, திரு அம்பர் . பெருந்திருக்கோயில், 9. இறைவன் தடத்த நிலையில் மூவகைத் திருமேனி களை மேற்கொள்வான். 'சிவன், சக்தி, நாதம், விந்து இவை நான்கும் அருவத் திருமேனிகள், *மகேசுவரன், உருத்திரன், மால் அயன் இவை உருவத் திருமேனிகள். சதாசிவன் அருவுருவத் திரு மேனி. இஃது இலிங்க வடியாய் இருப்பது. இந்த ஒன்பது திருமேனிகளையும் நவந்தருவேதம்’ எனறு வழங்குவர் சித்தாந்திகள். ஒருவனாகிய இறைவனே உலகத்தைச் செயற்படுத்த வேண்டி நவந்தரு பேதமாம் நிற்பன் என்பது தத்துவம்,