பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருத்தலங்கள் 229 குறிக்கப் பெற்றுள்ளன. (எ.டு) ஐயா று, கோட்டாறு, இடையாறு. சிறப்புடைய தீர்த்தத்துடன் இயைந்த தலங்கள் சிகுளம் என்ற பெயரால் வழங்குகின்றன. (எ டு): கடிக் னேசி, தஞ்சைத்தளிக்குளம் (வை.த.), திருக்குளம் (வை.த . ஊர்மக்கள் பலரும் கூடி இறைவனை வழிபடற்கேற்ற பொது இடங்களாய்த் திகழ்த்த தலங்கள் களம்: என்ற பெயராலும் அசிக்கப்பெறுகின்றன. (எ-டு: திருவேட்களம், நெடுங்களம், ஆற்றையடுத்து அமைந்துள்ள தலங்கள் துறை என்ற பெயரைப் பெறுகின்றன. இத்தலங்கள். அங்குச் சிறப்பாக வளர்ந்துள்ள மரம் முதலிய கருப்பொருள்களின் அமைப் பாலும் அவ்வந்நில அமைப்பாலும், பல்வேறு அடைமொழி களால் வழங்கப் பெறுகின்றன. (எ-டு): திருப்பராய்த்துறை, திருப்பாலைத்துறை, கடம்பந்துறை, திருமாந்துறை, திரு ஆலந்துறை, குரங்காடு துறை, மயிலாடுதுறை எனவும்: வெண்டுறை, பேணுபெருந்துறை, சோற் று த் துறை , பாற்றுறை எனவும் வரும் தலங்களைக் காண்க. இறைவனது திருவருளில் உயிர்கள் திளைத்து இன்புறு வதற்கு நிலைக்களமாய்த் திகழும் திருக்கோயில்களையும் 'நெறி' என்னும் பொருளில் துறை என்ற திருப்பெயராகி, வழங்கும் மரபும் உண்டு. திருவெண்ணெய் நல்லூர்த் திருக் கோயிலைத் திருவருட்டுறை எனவும், திருநெல்வாயில் திருக்கோயிலை 'அரத்துறை எனவும், மூவர் முதலிகள் குறித்துள்ளனர். இவ்வாறே திருச்சேறையிலுள்ள திருக் கோயிலைச் செந்நெறி' எனவும், திருவாரூரிலுள்ள கோயிலை அரநெறி எனவும் அப்பர் பெருமானும்; தண்டலை என்னும் ஊரிலுள்ள திருக்கோயிலை நீன் தெறி என்று காழிப் பிள்ளையாரும் குறித்துள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கி உணரத் தக்கதாகும்,