பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxviii இத்த்கைய பேரன்பர் இந்நூலுக்கு அணிந்துரை நல்கியது கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதுகின்றேன். இந்தப் பேற்றை இந்த நூலும் பெறுகின்றது. அணிந்துரை அருளிய அன்பருக்கு என் இதயம் கலந்த நன்றி என்றும் உரியது. புலவர் க. செ. குப்புசாமி ரெட்டியார் வடார்க்காடு மாவட்டம் காட்டுக்கா நல்லூரைச் சேர்ந்தவர். 1942-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம்பெற்று வேலூர் திருவேங்கடவன் உயர்நிலைப் பள்ளியில் பல்லாண்டு கள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். ஒய்வு பெறுவதற்கு முன்பே பணியிலிருந்து விலகிக் கொண்டு விட்டார். பணி யிலிருந்த பொழுதே உழவர் சம உரிமைக்கழகத்தின் அமைப் பாளராக இருந்தார். இது தவிர தமிழ்நாடு சிறுதொழில் சங்கத்தில் (TANSSIA) இணை அமைப்பாளராகவும் பணி யாற்றினார். உழவும் தொழிலும் என்ற திங்கள் இதழின் ஆசிரியராகப் புகழுடன் பணியாற்றினார். பல்லாண்டுகள் வடார்க்காடு விவசாயச் சங்க த ைல வ ராக வு ம் பணியாற்றி உழவர்களின் தோழராகத் திகழ்ந்தவர்" ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த வர். திடீரென மாரடைப்பால் காலமாகி உற்றார், உறவினர் நண்பர்கள், எண்ணற்ற உழவர் பெருமக்கள் ஆகியோரைத் துக்கத்தில் ஆழ்த்தியவர்: 1976முதல் என் முதல் சம்பந்தியாக இருந்தவர்: முத்தர் உலகில் வாழ்ந்து அனைவர்க்கும் ஆறுதல் கூறிக் கொண்டிருப்பவர். இவர் நினைவாக, இப் பெருமகனார்க்குத் 'தம்பிரான் தோழர்' என்ற நூலை அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். - இந்த நூலை யான் எழுதி வெளியிட என்னுளே தோன்றாத் துணையாக, அந்தர்யாமியாக, எழுந்தருளியிருக் கும் வேங்கடத்து எழில்கொள் சோதியை மனம், மொழி மெய்களால் வணங்கி வாழ்த்திச் சரண் அடைகின்றேன். மற்றும் நாவலூர் அண்ணல் இணையடிகளையும் முடிமீது வைத்துக் கொள்கிறேன். .. ..". -