பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvii பாரையையும் தாங்கிய பேராசிரியரைக் கண்டபோது உழவாரப் படையைத் தாங்கிச் செல்லும் அப்பர் பெரு மானை நினைக்கச் செய்தது. முதல்வரே கையுழைப்பில் ஈடு படுவதைக் கண்டபோத இவரிடம் பயின்றவர்களும் இவர் தலைமையில் அடங்கிய மாணாக்கர்களும் தலைவனைப் பின்பற்று' என்ற கட்சிப்போர்க்குரலுக்கு (Slogan) அடங்கிச் செயற்பட்டதை நேரில் கண்டு மகிழ்ந்தேன். இத்தகைய பேரன்பர் என் சம்பந்தி திரு குப்புசாமி ரெட்டியாருக்கும் நெருங்கிய நண்பர். இருவருமே டாக்டர் மு.வ. வுடன் நெருங்கிய தோழர்கள். சான்றோர்கள் நிறைந்த தொண்டை மண்டலத்தவர்கள். திரு குப்புசாமி ரெட்டியாருக்குப் படைக்கப்பெற்ற நூலுக்குப் பேராசிரியர் சிறப்புப்பாயிரம் நல்கிச் சிறப்பித்தமைக்குத் தலையலால் கைம்மாறு இலேன் . தமிழ்நேசரை அடுத்து இந்நூலுக்கு அணிந்துரை அருளி யவர் சிவநேசர் திரு. தே.க. சோமசுந்தரம் அவர்கள். போர்த் துறை, வங்கித்துறை, இந்து அறநிலையத்துறை இவற்றிலெல் வாம் பணியாற்றி அமைதி காணாத நிலையில் பள்ளிக்கல்வித் துறையை நாடி வந்தவர்; பல்லாண்டுகள் இதில் தலைமை யாசிரியராகப் பணியாற்றி மாணாக்கர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் இவர்களிடம் நற்பெயரை ஈட்டிய நல்லாசான். ஒய்வு பெற்று அண்ணாநகரில் வாழ்ந்தபோது (இப்போது போருளில் வாழ்பவர்) ஐந்தாண்டுகட்கு முன் இவர் நட்பு கிடைக்கும் பேறு பெற்றேன். இவர் என் சம்பந்தி திரு Յւնւ சாமி ரெட்டியாரின் ே தாழரும் கூட. சிறந்த தமிழன்பர். இப்படிச் சொல்வதைவிட உயர்ந்த சிவநேசர் என்று சொல் வதே சிறப்பு. பாடல் பெற்ற 275 சிவத்தலங்களில் கிட்டத் தட்ட 209 தலங்களை நேரில் வழிபட்டுச் சிவபெருமானின் பேரருளுக்கு இலக்கானவர். தவிர, வைணவ தலங்கள், 108 இல் 58ஐச் சேவித்துத் திருமால் அருளுக்கும் பாத்திரரானவர்,