பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvi செய்த கந்தன் அடிமை எஸ். பி. சண்முகம் பிள்ள்ை அவர் கட்கும் என் இதயம் கலந்த நன்றியை புலப்படுத்துகின்றேன். இந்த நூலுக்கு சிறப்புப்பாயிரம் நல்கிய பேராசிரியர் க, பெருமாள் (ஒய்வு பெற்ற அரசினர் கல்லூரிகளின் முதல்வர்) என் நெடுநாளைய நண்பர். பதவியிலிருந்தபோது செய்யாற்றில் பார்க்கும் பேறு கிடைத்தது. சிறந்த தமிழ் நேசாகக் காணப்பட்டார். அறிவியலைத் தமிழில் கற்பிக்கும் திட்டத்தில் உருப்படியான பணியில் ஈடுபட்டிருப்பதை நேரில் கண்டேன். நான் அறிவியலில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவனாதலால், அந்த வகுப்பிற்கு (பி.எஸ் சி வகுப்பு) என்னை இட்டுச் சென்றார். அந்த வகுப்பில் ஆசிரியர் பாடத்த்ைத தமிழில் நடத்திய பாங்கைக் கண்டு வியந்து போனேன்; அருந்தமிழில் அற்புதமாகக் கற்பித்தார். 1958-இல் இங்ஙனம் தாவர இயலைக் கற்பித்த அண்ணா மலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் அரங்கசாமி அய்யங் கார் கற்பிதத்தை நேரில் கண்டபோது ஏற்பட்ட வியப்பைப் போலவே இப்போதும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட முதல்வர் களும் பேராசிரியர்களும் இத்திருப்பணியில் ஈடுபட்டால் தமிழ்ப் பாடமொழியாகும் திட்டம் அற்புதமாகச் செயற்படும் என்பதை நினைத்தேன்; இன்றும் நினைக்கின்றேன். இங்ங்ணம் உண்மையாகப் பணியாற்றுவோர் எத்துணை பேர்? என்பது பெரிய கேள்வி. துறைதோறும் தமிழ் முழக்கம் கேட்கவேண்டும் என்ற துடிப்புள்ளவர் பேராசிரியர் க. பெருமாள் சிறந்த தமிழ் நேசர் உடல் நன்கு செயற்படு வதற்கு அளவான நாடித்துடிப்பு வேண்டும். அத்தகைய துடிப்புதான் பேராசிரியரிடமும் அமைந்திருந்தது. வேளாண் மைக் குடும்பத்திலிருந்து வந்தவராதலால், பாலைவனம் போன்றிருந்த கல்லூரி வளாகத்தைச் சோலை வனமாக்கி புள்ளதைக் கண்டு வியந்தேள். மண்வெட்டியையும் கடப்