பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXXV : பந்தர் என்ற நூல்களையும் படித்த பிறகு இந்தக் கட்டுரை யில் ஆழங்கால்பட்டு அநுபவிக்க வேண்டும், "செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்: என்பது ஆன் றோர் வாக்கு. இவ்வுலகில் செல்வச் சீமானாக இருப்பவன் ஏழுமலையான், செல்வ நாயகியைத் திருமார்பில் தாங்கிக் கொண்டிருப்பவன். அப்பெருமாட்டியும் அகலகில்லேன் இறையும்' என்று அவன் திருமார்பை விட்டு அகலாதிருப் பவள். இந்நிலையில் நாடோறும் அவனுடைய எண்ணற்ற பக்தர்கள் அவனது கருவூலத்தை நிரப்பிக் கொண்டிருக்கின் றனர். ஆகவே, இந்த உறுபெருஞ்வத்தைச் செழுங்கிளைச் சேர்ந்த பக்தர்கள் எழுதும் சமய வெளியீடுகளுக்கு வரை யாது வழங்கும் நிதி உதவித் திட்டத்தில் இந்நூலும் நிதி உதவி பெற்று வெளி வருகின்றது. இந்த உதவி பெறாது போயின் 40 ஆண்டுகள் கல்வித் தொண்டாற்றி ஓய்வு ஊதி யம் பெறாது தவிக்கும் அடியேனால் இந்த நூலை வெளி யிட்டிருக்க முடியாது. இவன், மேலும் வெளிவர இருக்கும் நாவுக்காசர், ஞானசம்பந்தர், தாயுமானஅடிகள், மாணிக்க வாசகர், வடலூர் வள்ளல் போன்ற பக்திப்பனுவல்கட்கும் உதவுவான் என்ற நம்பிக்கை என்பால் உண்டு. அவனது கருவி யாக இயங்கிவரும் தேவஸ்தானத்தாருக்கும் குறிப்பாகத் திரு K. சுப்பாராவ், திரு N, S, இராமமூர்த்திக்கும் என் அன்பு கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். - இந்த நூலைச் செவ்விய முறையில் அழகுற அச்சிட்டு உதவிய நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர் திரு. நா. நாச்சியப்பன் அவர்கட்கும், எழில் கொழிக்கும் முறையில் அட்டை ஓவியம் வரைதல், அச்சுக்கட்டை தயாரித்து மூவண்ணத்தில் அச்சிடும் வரையில் பொறுப்பேற்று உதவிய ஓவிய மன்னர் P.N. ஆன்ந்தன் அவர்கட்கும் லாமினேஷன் போட்டு உதவிய மாருதி லாமினேஷன் உரிமையாளர் பார்த்திபன் அவர்கட்கும், இவ்வளவும் ஆன நிலையில் அழகிய முறையில் கட்டமைத்துக் கற்போர் கையில் கவினுறத் தவழச்