பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiv வாகியது. இதற்குப் பேராசிரியர் க. வெள்ளைவாரணனின் பன்னிருதிருமுறை வரலாறு (இரண்டுபகுதிகள்) பெருந்துணை பாக இருந்தன. அப்பெருமானின் வாழ்க்கை வரலாற்றை" அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. நூலின் அடிக்குறிப்பு களில் சுந்தரர் சேவித்த தலங்களைப்பற்றிய விவரங் களையும் நூலில் அவர் பாடியுள்ள பதிகங்களின் ஒவ்வொரு பாடலையும் தந்துள்ளேன். மேலும் அறிய வேண்டுவார் தேவாச அடங்கன் முறை'யைப் படித்து அறிந்து கொள்ள லாம். இந்த நூலைக்கொண்டு சுந்தரர் வழிபட்ட திருத் தலங்களைச் சேவிக்கவும் அவர் பாடிய திருப்பதிகங்களை அநுபவித்து மகிழவும் இது துணையாக இருக்கும். படிப் போரின் மன நிலை, பக்தியில் வளர்ச்சி, இறைவனிடம் ஈடு பாடு இவற்றிற்கேற்பச் சிவாதுபவம் பெறத் துணைசெய்யும், இஃதெல்லாம் கைகூடுவதற்கு அவனருளாவே அவன்தாள் வணங்கும்’ பேறும் பெற்றாக வேண்டும். 'திருவருட் செல்வர்கள்-என்ற வரிசையில் மூன்றாவ தாக வர வேண்டிய நூல் இது. முதலில் எழுதப் பெற்றதால் முதலாவதாகவே வெளிவருகின்றது. இதனால் 'சிவத்தலங் கள் பற்றிய கட்டுரையையும் இதில் சேர்த்தேன். இத்தனை தொடர்ந்து வெளிவர இருக்கும் நாவுக்காசர், ஞானசம் 4. திருத்தொண்டர் புராணம் (ஆறுமுக நாவலரின் உரைநடை) தொடக்கத்தில் புராண வரலாறு’ என்பதில் கண்ட குறிப்பு: ஆதிகாலத்தில் திருக் கைலாசபதியாகிய சிவபெருமான் தமது திருவுரு வத்தைக் கண்ண்ாடியிலே பார்த்து அழைத்தருள லும் கோடி சூரியர்கள் ஒருங்கு திரண்டாற் போன்று திருமேனிப் பிரகாசத்தோடு தோன்றி னார். அவர் பெயர் சுந்தார். அவர் திருப்பாற் கடலி னின்றும் தோன்றி விட்டுணு முதலிய தேவர்களெல் லாரையும் ஒடச் செய்த ஆலகால விஷத்தைச் சிவ பெருமான் திருவமுது செய்தருளும் பொருட்டுத் தமது உள்ளங்கையினுள்ளே அடக்கிக் கொண்டு போய்க் கொடுத்தார். அதனால் அவருடைய பெயர் ஆலால சுத்தார் என்றாயிற்று.