பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiii லும் ஈடுபட வேண்டும், சமய குரவர்களின் பாடல் பெற்ற திருத்தலங்களைச் சேவிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிக் கடி முகிழ்த்தும் அடங்கியும் மாறிமாறி இருந்த வந்தது. ஆயினும், சமய இலக்கியங்களையும் சாத்திரங்களையும் பயின்று சைவ சமய விளக்கு என்ற நூலை வெளியிட்டேன். இந்நிலையில் ஒருநாள் தம்பிரான் தோழரின் சுந்தரக் கவி கள்' என்ற தலைப்பில் அவரது திருநட்சத்திரத்தன்று (ஆடி, சுவாதி; 25,7-85) உரையாற்ற வேண்டும் என்று வானொலியி விருந்து அழைப்பொன்று வந்தது. இதுவே துண்டு கோலாக அமைந்து சைவ இலக்கிய ஈடுபாட்டில் கொண்டு செலுத்தி யது. சைவ இலக்கிறங்களில் ஆழங்கால்பட்டு வருகின்றேன். திருத்தலப் பயணம் மேற்கொள்வதற்கு ஒய்வு ஊதியம் கூட பெறமுடியாத நிலையில் (40 ஆண்டு உழைப்பு) பொருளா தார வசதி இல்லை. அப்படி ஏற்பட்டாலும் பயணம் செய் வதற்கு உடல் நிலையும் சரிப்பட்டு வராது என்ற நிலையும் தோன்றியுள்ளது. - மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருரும் வாய்க்கும் பராபரமே!’ என்ற தாயுமானவர் வாக்கும் நெஞ்சில் உந்திக் கொண்டே உள்ளது. பூசலார் நாயனார் மானசீகமாக எழுப்பிய திருக் கோயிலும் நினைவிற்கு வந்தது. சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் காட்டியுள்ள வழியைக் கடைப்பிடித்துக்கொண்டு அவருடன் மேற் கொண்ட கற்பனைப் பயணத்தின் விளைவாக இந்நூல் உரு 3. தா.பா; பராபரக் கண்ணி-156

  • ఇrుజ=