பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻 喙 நூலமுகம ஒருமணத்தைச் சிதைவுசெய்து வல்வழக்கிட் டாட்கொண்ட உவனைக் கொண்டே இருமணத்தைக் கொண்டருளிப் பணிகொண்ட வல்லாளன் எல்லாம் உய்யப் - பெருமணச்சீர்த் திருத்தொண்டத் தொகைவிரித்த பேரருளின் பெருமாள் என்றும் திருமணக்கோ லப்பெருமாள் மறைப்பெருமாள் எமதுகுலத் தெய்வ மாமால். -சிவஞானமுனிவர் 1960-ஆகஸ்டு முதல் (திருப்பதியில் பணியேற்ற நாள் முதல்) வைணவ சமயத்திலும் வைணவ இலக்கியங்களிலும் ஆழங்கால் பட்டுள்ளேன். இதன்காரணமாக 108 திவ்விய தேசங்களைச் சேசத்து அத்திவ்விய தேசத்து எம்பெருமான் களை வழிபட்டும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பாசுரங்களில் ஆழங்கால்பட்டும் 5 திருத்தலப் பயண நூல் களை வெளியிட்டேன். நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து டாக்டர் (Ph.D) பட்டம்’ பெற்றேன்; இது தவிர, சில நோக்கில் நாலாயிரம், கலியன் குரல் (அண்ணாமலைப் பல் கலைக் கழக வெளியீடு) வைணவ உரைவளம் என்ற நூல் களும் வெளிவந்துள்ளன. இந்நிலையில் 1977 அக்டோபரில் ஒய்வு பெற்று, 1978 சனவரி 14:ஆம் நாள் சென்னையில் குடியேறியது முதல் சைவ சமயத்தையும் ஆயவேண்டும், சைவ இலக்கியங்களி 4. காஞ்சிப்புராணம்-காப்புப்பகுதி. 2. இந்நூல் ஆங்கிலத்திலானது திருவேங்கடவன் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. -