பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxi தலங்களின் பெயர்க் காரணங்களையும் பல தலங்களிலுள்ள கோயில்களின் பெயர்க் காரணங்களையும் விளக்கி, தம்பிரான் தோழர் வழிபட்ட திருத்த வங்களின் பட்டியியலையும் இணைத்து, அத்தலங்கள் இருக்கும் இடங்களையும் ஆங்காங்கே குறிப்பிட்டு, அட்டவீரத்தலங்கள், சப்தவிடங்கத் தலங்கள், சப்ததானத் தலங்கள் என்று கருதப்படும் சிறப்புத் தலங்களையும் குறிப்பிட்டு, தம்பிரான் தோழரின் வரலாற்றை முடிக்கின்றார் பேராசிரியர். தம்பிரான் தோழரின் பாடல்கள் யான்", "எனது' என்னும் அகப்பற்று புறப்பற்றுக்களை அறவே நீக்கி, இறைவன் திருவருளிலேயே மாண்டமனமுடையோர்களுக்குப் பலகோலங்களில் இறைவன் காட்சி தந்து, அவர்கள் வேண்டியதை வேண்டியவாறே ஈந்து, அவர்கள் இடுக்கண் களையும் நீக்கி ஆட்கொள்வான் என்பதும், அப் பண்ணார்ந்த பாடல்கள் பெரிதும் மனவெழுச்சித் தந்து, நீர்க்குமிழி போன்ற நிலையற்ற உலக வாழ்வின் நின்ைவூட்டி நன்னெறி காட்ட வல்லனவென்பதும் வெளிப்படை, இச்சிறந்த சைவப் பெரியாரின் வாழ்வை விரிவாயெழுதி முடித்து, என்பாலுள்ள அன்பின் அடிப்படையில் அணிந்து ைதருமாறு கேட்ட பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கோள்கிறேன். இவர் மேன்மேலும் பல தரமான நூல்களை எழுதித் தமிழுக்கும் சமயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும் எனக் கருணைக் கடலான இறைவனை வணங்கி வாழ்த்துகின்றேன். * - - - . . . . . . . . . . . . . . . தே. க. சோமசுந்தரம் 42, இலக்குமிபுரம் விரிவு - . - போரூர் (சென்னையருகில்) பின் கோட் 602104