பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塞翼宽 develop devotion, it is enough to show that Jnana and Bhakti are one and the same”. பேராசிரியர் ஐந்தெழுத்தின் பெருமையைக் குறிப்பிட் டுள்ளார், ஐந்தெழுத்தின் பெருமையைப் பன்னிரு திருமுறை நூல்களிலும், சைவசித்தாந்த சாத்திரங்களிலும் பரக்கக் காணலாம். ஐந்தெழுத்து இறைவனின் திருப்பெயராய்த் திகழும் பெருமையுடையது. சுந்தரர் பெருமான், 'நற்றவரவுனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவுே', என்கின்றார், பேராசிரியர் கோயில்களின் பெருமையையும் இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அவ்வையார் அருள்வாக்கு. சிவஞானபோதம் பன்னிரண்டாம் சூத்திரம், 'செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழிஇ யன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் ஆனெனத்தொழுமே” என்று கூறுகிறது. ஆலயவழிபாட்டின் இன்றியமையாமையைப் பழங்காலந்தொட்டே தமிழகமும், இந்திய நாடும் உணர்ந் துள்ளன. பேராசிரியர் தேவாரத் திருத்தலங்கள் தோன்றிய முறை யினையும் வரலாற்றினையும் கூறி, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய கோச்செங்கட் சோழரின் சிறந்த சிவபக்தியையும், அப்பெரியார் கட்டிய எழுபது மாடக் கோயில்களையும், அமைப்பையும் விளக்கியுள்ளார். தேவாரத் தலங்களிருக்கும் பண்டைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளையும், இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதி யிலிருக்கும் தேவாரத்தலங்களையும், தெற்கே ஈழ நாட்டி விருக்கும் இரு தேவாரத் தலங்களையும் குறிப்பிட்டு, பல