பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii வில்லை. ஆகையால் இதன் உண்மையை இறைப்பற்றும் பெரும் புலமையுமுடைய பெரியோர்கள் ஆராய்ந்து தெளி வார்களாக, சுந்தரர் 100 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றுள் தலப் பதிகங்கள் 96; பொதுப்பதிகங்கள் 4. மூவர் தேவாரப் பதிகங் கள் இரண்டற இசையோடியைந்தனவாகும். அருள்மிகு விபுலாநந்த அடிகள், தாம் இயற்றிய அரிய யாழ் நூலில் ‘'தேவாரவியல்' என்ற தலைப்பில் தேவாரப் பாடல்களின் யாப்பமைதியினையும் இசையமைதியினையும் எண்பது பக்கங் களில் ஆராய்ந்துள்ளார். அடிகளார் மேலும் அவ்வரிய நூலில் எழுதுவது: 'பாட்டுக் குருகுந் தமிழ்ச் சொக்கநாதர் கூடலம் பதியிலே பாணபத்திரர் பொருட்டால் விறகாளாகி இசை பரப்பிய ஞான்று, அவ்விசை வலையிற்பட்ட விடவாய் நாகமும், பல்பொறி மஞ்ஞையும், யானையும், சிங்கமும், மானும், புவியும் என்றின்னவை தம்மியல்பாகிய பகைமை யினை மறந்து ஒன்று கூடி நின்றனவெனப் புராணங்கூறும், 'திரு நீலகண்டப் பெரும்பாணருக்குப் பொற்பலகையளித்து. ஞானசம்பந்தருக்குப் பெற்றாள மீந்து, இசை வளர்த்த பேரருளாளன் இசையே உருவாக நின்றான் என்னும் உண்மை, பண்ணும் பதமேழும். விண்ணும் முழுதானான்’ என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கினாலும், ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் எனக்கூறிய ஆளுடைய நம்பியின் திருவாக்கி னாலும், ஓசை ஒலியெவாம் ஆனாய் நீயே எனக்கூறிய ஆளுடைய அரசர் திருவாக்கினாலும் அறியப்படுகின்றது. முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே எனக் கன்னலும் அமிழ்தும் போன்ற கார்முக வண்ணனைப் பாடிய திருக்குருகைப் பிரான் அவ்வண்ணல் யாழ் நரம்பின் முதிர் சுவையாகி நின்றான் என்னும் உண்மையினைத் தெளிவு