பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii 'தா னெனை முன்படைத்தான்' என்று பாடி கைலையை யடைந்து, உள்ளே சென்று சிவபரம் பொருளைக் கண்டு உருகினார் நம்பியாரூரர். சிவபெருமான் "ஆருரனே வந்தனையோ’’ என்றார். தன்பிழையெலாம் பொறுத்துத் தன்னைத்தடுத்தாட் கொண்டு கயிலைப் பேற்றை மறுபடியும் அருளிய பெருமான் கருணையைப் போற்றி நின்றார் ஆரூரர். வாயிலில் தடைப்பட்டு நின்ற சேரமானாரை, இறைவன் கட்டளைப்படி நந்தியம் பெருமான் அழைத்துச் சென்றார். இறைவனை வணங்கிப் போற்றிய சேரமானார் வேண்டுகோளின்படி, அவர் பாடிய நெரு "ஞான உலாவை' இறைவன் கேட்டருளினார். மண்ணுலகில் பரவையாரும் சங்கிலியாருமாய்ப் பிறந்து, இறைவனை இடையறாது போற்றி, வன்றொண்டப் பெரு மானை மணந்து பேரின்பத்தைத் துய்த்து வாழ்ந்த இவ்விரு சிவநேயச் செல்வியரும், கைலாயத்தில் முன்பு போல் கமலினி அணிந்திதையாராய் மாறித் தங்கள் பழைய தொண்டு களைச் செய்து வரலாயினர். வன்றொண்டர் அருளிய பதிகங் களை வருணன் திருவஞ்சைக் களத்திலும், சேரமான் அருளிய 'திருஉலாவை மாசாத்தனார் திருப்பிடவூரிலும வெளி யிட்டனர். - - சுந்தரரின் பிறப்பைக் குறிப்பிட்ட சேக்கிழார் பெருமான் மற்றசைவ சமய நாயன்மார்களின் முற்பிறப்பைக் கூறவில்லை யென்றும் சுந்தரரின் முற்பிறப்பு மட்டும்.குறிப்பிடப்பட்டுள்ள தென்றும் எடுத்துக் காட்டியுள்ளார் பேராசிரியர். காலஞ் சென்ற பேரறிஞர் உயர்திரு. மதைமலையடிகளார், பெரிய புராணத்தில் "திருமலைச் சருக்கம் இடைச் செருகலா யிருக்குமென்றும் கூறியுள்ளார். காலஞ்சென்ற அறிஞர்கள் திரு வி. க. , சிவக்கவிமணி உயர்திரு. C. K. சுப்பிரமணிய முதலியார் போன்றவர்கள் இவ்வித ஐயப்பாட்டையெழுப்பு