பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi பூண்டியில் சிவபெருமானை வழிபட்டு, இழந்த பொருள்கள் அனைத்தையும் மீட்டு திருவாரூரை நோக்கிச் சென்றார் வன்றொண்டர். திருவாரூரில் இறைவனை வழிபட்டு வந்த நாளில் வன்றொண்ட ரின் மனம் மலைநாட்டு மன்னர் பெருமான் மீதேயிருந்தது. மலைநாடு நோக்கினார். கொங்குநாட்டில் அவிநாசியில் ஒர் அரிய செயல் நிகழ்ந்தது, ஒரு வீட்டில் மங்கல ஒவியும் மற்றோர் வீட்டின் அழுகையொலியும் கேட்டன. இரு சிறுவர்கள் குளத்தில் நீராடச் சென்றனர். ஒருவன் முதலையால் விழுங்கப்பட்டான். அவனை நினைந்து அவன் பெற்றோர் அழுதனர். தப்பிய சிறுவனின் உபநயனத் தின் பொருட்டு அவன் வீட்டில் மங்கல ஒலியெழுந்ததையும் வன்றொண்டர் அறிந்தார். அவர் வருகையைக் கேள்வியுற்ற பெற்றோர்கள் இறந்த சிறுவனை மறந்து, பேருவகையுடன் வன்றொண்டரை வரவேற்றுமகிழ்ந்தனர். அவர்கள் அன்பின் திறத்தை வியந்து, "க்ரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே’ என்று பாட, முதலையும் கரைக்கு வந்து பிள்ளையை உமிழ்ந்து சென்றது. இல்வற்புதச் செயல் மலைநாட்டை வியப்பில் ஆழ்த்தியது. சேரமானார் வன்றொண்டரை எதிர்கொண்டு, அவரைத் தழுவி வனங் கினார், மன்னருடன் மகிழ்ந்துறைகின்ற நாட்கள் பல கடந்தன. வன்றொண்டர் வாழ்ந்த காலம் இந்நிலவுலகில் முடிவுறு கின்றது. கைலாயத்தினின்றும் வெள்ளை யானை வந்தது. வன்றொண்டர் அதன் மீதமர்ந்து மண்ணுலகை நீத்து மேலே சென்றார். இதை அறிந்த சேரமானாரும் ஒரு குதிரையின் காதிலே அஞ்செழுத்தோதி அதன்மீது அமர, அஃது வன் நொண்டரின் வெள்ளை யானையை வலம் வந்து, அதனை யும் கடந்து சென்றது.