பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXyo அறுபத்து மூவரில் ஒருவர். வன்றொண்டருக்குச் 'சேரமான் தோழர்' என்ற பெயரும் உண்டு. இவ்விரு பெரியோர்களும் பாண்டிநாடு போந்து பல தலங்களில் இறைவனை வழி பட்டனர். திருச்சுழியலில் வன்றொண்டர் கனவில் இறைவன் தோன்றி நாம் இருப்பது கானப்பேர்’ என்றருளி மறைந் தார். இருவரும் திருக்கானப்பேர் சென்று இறைவனை வழி பட்டனர். வேறு பல தலங்களிலும் இறைவனைப்பாடி திருவாரூர் திரும்பினர். சேரமானாரின் அன்பான வரவேற்பினையேற்று வன் றொண்டர் மலைநாட்டுக்குச் செல்ல இசைந்தார். வழியில் திருவையாற்றில் இறைவனை வழிபட விழைந்தனர், காவிரி பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருந்தது. 'விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி அதிர்க்கும் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ என்று வன்றொண்டர் பாட, இவ்விரு பெரியோர்களும் திருக் கூட்டத்தினரும் கடந்து செல்லக் காவிரிப் பாவையும் நடுவே வழிவிட்டுக் காட்டினாள். மலைநாடு சேர்ந்தனர். வன்றொண்டரை அளவற்று அன்பால் வரவேற்று மலைநாட்டு மன்னர் வழிபாடுகள் செய்தார் திருவஞ்சைக்களத்துப் பெருமானை வழிபட்டனர். சில நாட்களுக்குப் பிறகு வன்றொண்டர் சேரமானாரிடம் பிரியாவிடை பெற்று, அவர் தந்த அன்பளிப்புகளை ஏற்றுக் கொண்டு திருவாரூர் திரும்பினார். வழியில் கொங்கு நாட்டில் திருமுருகன் பூண்டிக்கு அண்மையில் இறைவன் ஆணையால் பூதகணங்கள் வெஞ்சிலை வேடராய் மாறி, சேரமானார் பொருள்களைப் பறித்துச் சென்றன. வன் றொண்டருக்கு எவ்வித ஊறும் செய்யவில்லை. திருமுருகன்