பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv அன்பை இறைவன்பால் வேண்டிய அம்மையாரைப் போற்றினார். திருப்பதிகம் பாடினார். பிறகு காஞ்சியில் திருவேகம்பர் அருளால் இடக்கண் பார்வையையும், திருவா ரூரில் தியாகேசப் பெருமானருளால் வலக்கண்பார்வையை யும் பெற்றார். இடையே திருத்துருத்தி மேயானை வழிபட்டு உடலில் பிடிக்கப்பட்டிருந்த பிணியினின்றும் விடுபட்டார். வன்றொண்டர் சங்கிலியாரை மணந்த செய்தியைக் கேள்வியுற்றுப் பரவையார் பெரிதும் சீற்றங் கொண்டார். அவரது ஊடவின் தன்மையை, வள்ளுவனார் வகுத்த பல குறட்பாக்களால் பேராசிரியர் எடுத்துக் காட்டுவது நகைச் சுவைததும்பும் மகிழ்ச்சிக்குரிய இடமாகும். வன்றொண்டரின் வேண்டுகோளின்படி சிவபெருமான் நள்ளிரவிலும் பரவை யார்பால் தூது சென்று அவரது ஊடலைத் தீர்த்து, தன் தோழரின் இடரையும் களைந்தருளினார். இறைவனையே தூதுவிடுத்த செய்தியைக் கேள்வியுற்ற ஏயர்கோன் கலிக்காம நாயனார் வன்றொண்டரை வெறுத் தார். அதனால் சூலைநோய் தந்து அந்நோயையும் வன் றொண்டராலேயே இறைவன் தீர்த்தருளினார். ஏயர்கோன் கலிக்காமர் அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவர். . இவ்விரு பெரியோர்களும் சிறந்த நட்புரிமை பூண்டு அளவளா வினர். பிறகு வன்றொண்டர் திருநாகைக் காரோணத்தை யடைந்து தமிழ்பாடி இறைவன் அருளால் பொன், மணி முதலியவற்றைப் பெற்றார். . மலைநாட்டு மன்னரும் மிகச் சிறந்த சிவநேயச் செல்வரு மான சேரமான் பெருமாள் நாயனார், வன்றொண்டரின் பெருமையைக் கேள்வியுற்று, திருவாரூர் வந்து இருவரும் ஒரு வராயினர் என்ற முறையில் தோழமை பூண்டு, பல தலங் களுக்குச் சென்று வழிபட்டனர். சேரமான் பெருமானாரே கதறிற்றறிவார் நாயனார் என்ற பெயரையும் உடையவர்.