பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii இறைவன் முன் சபதம் செய்து கொடுத்தல் தகாதென்றும், மகிழின் கீழ்ச் சபதம் செய்து தரவேண்டுமென்றும் சொல்ல வன்றொண்டரும் இசைந்து சபதம் செய்தார். வன்றொண்டர் திருக்கோயிலில் நம் திருமுன்பு சூளுரைக்க வந்தால், நீ அதற்கு உடன்படாது, மகிழமரத்து அடியில் செய்து தருமாறு வற்புறுத்துக” என்று சங்கிவிக்குக் கூறிய இறைவனின் திருவுள்ளக் குறிப்பை நம்மால் அறிந்து கொள்ள இயலவில்லை" என்றுகுறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் இஃது ஒரு முரண்பாடுடைய செயலாகத்தான் தோன்று கிறது. இருப்பினும் இறைவனின் திருவுள்ளக் கருத்தை யாரால் ஆழ்ந்து அலசிப் பார்க்க இயலும்? திருமணம் நடை பெற்றது. வன்றொண்டரும் சங்கிலியாரும் ஊழியாம் ஒரு கணந்தான் அவ்வூழி ஒரு கணமாம்' எனும்படி இன்ப வாழ்வு வாழ்ந்தனர். . தியாகேசப் பெருமானை மறந்திருக்க முடியவில்லை. திருவாரூர் செல்ல ஒற்றியூரை விட்டு நீக்கினார். சபதம் தவறினார். அவரது இருகண்களின் ஒளியும் மறைந்தது. 'நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு' -- " - என்பது வள்ளுவர் வாக்கு. நடுநிலையிலிருந்து உயிர்கள் அனைத்தையும் படைத்தும், காத்தும், துடைத்தும் மறைத் தும், அருளும் இறைவன் வன்றொண்டர் சிறந்த தோழரே யானாலும், அவருக்குரிய தண்டனையைத் தாராமலிருப் uGowrrr! . . . . . . . . . . . . . . . . . சிவபெருமானை நினைந்து நினைந்து உருகிய வன் றொண்டருக்குத் திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்ததருளினார். திருவாலங்காட்டை யடைந்தார். காரைக்கால் அம்மையார் தலையாலே வலஞ் செய்த பெருமையை உடையது அத்தலம். அங்கே இறவாத இன்ங்