பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii எடுத்ததும், திருக்குருகாவூரில் வேதியராய் வந்து தம்பிரான் தோழரின் பசி தாகத்தைத் தீர்த்தருளியதும், திருக்கச்சூர் ஆலக்கோயிலில் இறைவன் மறையவராய் வந்து சோறு இரந்து கொண்டு வந்து அவரது பசியைத் தீர்த்ததும் வன் நொண்டரின் பதிகங்களிலிருந்தே அகச்சான்றுகளாகக் காண்கின்றோம். - திருக்காளத்திக்கு வந்து அன்பே பிழம்பாய்த் திகழ்ந்த கண்ணப்பரைத் தொழுது, காளத்தியப்பரை வணங்கினார். அங்கிருந்தே திருப்பருப்பதம், திருக்கேதாரம், திருக்கைலாயம் முதலிய தலங்களைப் பணிந்து பாடினார். . திருவொற்றியூரை அடைந்தார். இங்கும் ஒர் அரிய நிகழ்ச்சி நடக்க விருக்கின்றது. கைலாயத்தில் உமாலேவி யாருக்குத் தொண்டு செய்து வந்த அனிந்திதையார், ஞாயிறு கிழவர் என்பவருக்கு மகளாகப் பிறந்து, சங்கிலியார் என்னும் பெயர் சூட்டப்பெற்று, இறைவனை வழிபட்டுவந்தார். பண்டை நற்றவத்தால் தோன்றிய சங்கிலியாரைத் திரு வொற்றியூர்க் கோயிலில் வன்றொண்டர் கானலுற்றார். 'மின்னுக் கொடிபோல்வாள் என்னை உள்ளந்தவிர்ந்தாள் யார்கொல்' என நினைந்தார். இறைவனை வேண்டினார். சிவபெருமான் வேதியராய் சங்கிலியாரின் முன்தோன்றி வன் றோண்டரை "மணத்தால் அணைவாய்' என்றருளினார். வன்றொண்டர், திருவாரூரில் தியாகேசர்பாலும் பரவை யார்பாலும் பெரிதும் ஈடுபாடுடையவராதலால், திரு வொற்றியூரை விட்டு விலகிச் செல்லேன்' என்று சபதம் செய்து கொடுக்க வேண்டுமென்று சங்கிலியார் வேண்டினார். வன்றொண்டரும் இசைந்தார். அவ்வேளையில் இறைவன் மகிழின்கீழ் எழுந்தருள வேண்டுமென்று வன்றொண்டர் வேண்டினார். இறைவனும் அதற்கிசைந்தார். ஆனால் சபதம் செய்ய வந்தபொழுது, சங்கிலியாரின் தோழிகள்