பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&xi திருநாட்டியத்தான் குடிக்குச் சென்றார். வனப்பகை, சிங்கடி என்ற தம் இரு பெண்களையும் ஆட்கொண்டருள வேண்டினார். இவ்விரு பெண்களையும் வன்றொண்டர் தம் புதல்விகளாக ஏற்றருளினார். இஃது அவர் பெருங் கருணையைக் காட்டுகின்றது. தம்மைச் 'சிங்கடியப்பன்' . 'வனப்பகையப்பன் என்று திருப்பதிகத்தில் அமைத்துப் பாடினார். கோட்புலியார் அறுபத்துமூன்று சைவ சமய நாயன்மார்களில் ஒருவர். பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்ட வன்றொண்டர், தில்லைச் சிற்றம்பலவன்பாலும், திருவாரூர் தியாகேசப் பெருமான்பாலும் இடையறாத ஈடுபாடு கொண்டிருந்ததால், அவர் இவ்விரு தலங்களுக்கும் அடிக்கடி வந்து போனதாகவும் தெரிகின்றது. நாம் அற்புதங்கள் என்று நினைக்கக் கூடிய நிகழ்ச்சிகள் வன்றொண்டர் ாைழ்வில் நிகழக் காண்கின்றோம். திருப் புகலூரில் பொன்னை வேண்டிய பொழுது, தலையணையாக வைத்திருந்த செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறின. "தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்' என்று பாடினார். பிறகு திருப்பனையூரில் இறைவன் திருக் கூத்துக் காட்சி வழங்கியதும், திருவாலம் பொழிலில் அவர் கனவில் தோன்றி "மழபாடியை மறந்தாயோ' என்று கேட்டதும், திருப்பேரூரில் திருச்சிற்றம்பலத்திலே ஆடும் திருக்கூத்தைக் காட்டியதும், வேதியராய்த் தோன்றி "கூடலையாற்றுாருக்குப் போகும் வழி' என்று சொல்வி மறைந்ததும், திருமுதுகுன்றத்தில் பன்னீராயிரம் பொன் பெற்று மணிமுத்தா நதியிலிட்டுத் திருவாரூர்த் திருக்குளத்தில்