பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

赏烹 தியாகேசப் பெருமான் அவர் முன்னே தோன்றி அவரது வழித்தொண்டை அறிவித்து’ ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுத்தார். இறைவன் எடுத்துக் கொடுத்த இவ்வடியே வன்றொண்டர் பாடிய திருத்தொண்டத் தொகைக்கு முதலடியாகும். ' என்றும் திருமணக் கோலத்தோடு வேட்கை திர இவ் வுலகில் வாழ்வாயாக’’ என்ற வானொலியும் எழுந்தது. தன் தோழமையையுந் தந்து இறைவன் மறைந்தருளினார். பண்டை நல்வினை கூட்ட. கோயிலில் திருப்பணி செய்யும் கணிகையர் குலத்தில் தோன்றிய பரவையாரைக் கண்ணுற்றார். இருவரும் சிவநேயத்தில் திளைத்தவர்களா தலால், பரவையாரைப் பார்த்ததும், இவள் "அற்புதமோ, சிவனருளோ அறியேன்” என்று வன்றொண்டர் அதிசயித் தார். இவரைக் கண்ட பரவையாரும் 'முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ?' என நினைந்தார். இறைவன் பணித்தபடி இருவருக்கும் திருமணம் நடந்தது. “பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே’’ என்பது நம்பியாரூரர் வாக்கு இப்பெரியார் பெண்ணின் பெருமையை இவ்வாக்காற் கொண்டாடுவது, நாம் மறவாது போற்றி மகிழ்வதற்குரியதாகும். இந்நிகழ்ச்சியைப் பேரா சிரியர் நன்கு விளக்கியுள்ளார் திருவாரூரில் 'நமது தோழமையை உனக்குத் தந்தோம்' என்ற அசரீரி வாக்கு இறைவன் அருளால் எழுந்ததால், அன்று முதல் வன் றொண்டர் 'தம்பிரான் தோழர்' என்றும் அழைக்கப் பட்டார். குண்டையூர் என்னும் ஊரில் ஒரு பெரியார் இருந்தார். அவர் பரவையாரிடத்தில் பேரன்புடையவர். அவர் வேண்டு கோளின்படி சிவபெருமான் நெல்லை மலையாகக் குவித்துத் திருவாரூரில் பூதகணங்களைக் கொண்டு எங்கும் பரப்பியது ஒரு திருவருள் நிகழ்ச்சியாகும். கோட்புலியார் என்ற பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்கி வன்றொண்டர்