பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 翠翠 பட்டாரென்றும், அத்தலங்களுக்குரிய பதிகங்கள் மறைந்து போயின என்றும், 'சிவபெருமான் அமர்ந்தருளும் பொருத்த மாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி' என்ற சேக்கிழார் வாக் கால் காட்டுவதிலிருந்து அறிகின்றோம். திரு ஆமாத்துரர் கல்வெட்டு ஒன்றால் பதினாறு குருடர் கள் திருப்பதிகம் பாடுவதற்கும், அவர்களுக்கு வழித்துணை யாயிருந்து நடத்திச் செல்ல இருவர் நியமிக்கப்பட்டிருந்தன ரென்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இஃது அக்கால ஆட்சியின் சிறப்பினையும், மக்களின் ஆழ்ந்த இறைப் பற்றினையும் உயர்வாய பண்புகளையும் எடுத்துக் காட்ட வல்ல சான்றாகும். பல சிவத்தலங்துளுக்குச் சென்று வழிபட்டுப் பதிகங்கள் பாடிய வன்றொண்டர் திருத்துறையூருக்கு வந்தார். அங்கே இறைவனை நோக்கித் தவநெறி வேண்டினார். திருநாவுக் கரசர் உழவாரத் தொண்டு செய்த தலம் திருவதிகை. அத்தலத்தை மிதியாமல் வன்றொண்டர் சித்தவட மடத்தில் தங்கினார். உறக்கம் வந்தது. இறைவன் கிழவேதியராய் அந்து அங்கே திருவடி தீக்கைசெய்தருளினார். தில்லையிலே கூத்தப் பெருமானை வழிபட்டார். ஞானத்தால் தொழும் ஞானிகள் இறைவனை வழிபடும் பொழுது அவர்களது ஐந்து பேரறிவும், கரணங்கள். நான்கும் குணம் ஒரு மூன்றும் எவ்வாறு இயங்கும் என்பதைப் பேரா சிரியர் காட்டி விளக்குவது (பக் 44 -47 சிந்தித்து மகிழ்வதற் குரியதாகும் 'திருவாரூருக்கு வா' என்ற வானொலி எழுந்தது. மூன்று வயதில் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தர் பிறந்த இடம் சீகாழி, அதை மிதியாது எல்லைப் புறத்தில் தங்கியிருந்தபொழுது வன்றொண்டருக்கு இறைவன் காட்சி தந்தருளினர். பல தலங்களில் வணங்கிய பிறகு திரு வாருண்ர அடைந்தார். கோயிலில் தேவாசிரிய மண்டபத்தில்