பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii ஆலாலசுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் சடையனார் என்பவருக்கும் அவர் மனைவியார் இசைஞானியாருக்கும் புதல்வராய்ப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர்களால் இடப்பட்ட பெயர் நம்பியாரூரர் என்பதே. சிறுவயதி விருந்தே நரசிங்கமுனையர் என்னும் அரசரால் வளர்க்ப் பட்டார். திருமணத்திற்குரிய வயது வந்தது. புத்தூரில் வாழ்ந்த சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்வதாக முடிவாயிற்று. சிவபெருமான் அந்தணர்க்கோலம் தாங்கி, திருமணப்பந்தரில் நுழைந்து, நம்பியாரூரரைப் பார்த்து 'நீ என் அடிமை' என்று வாதாடி, திருமணத்தைத் தடுத்து கருணைநோக்கம் செய்தருளினார் என்பது வரலாறு, அந்தணர்க் கோலம் தாங்கி வந்த சிவபெருமானுக்கும், நம்பியாருரருக்கும் நடந்த வாக்குவாதத்தில், “நீ ஒரு பித்தனா’ என்று இறைவனைப்.பழித்தார். அண்மையிலிருக் கும் திருவெண்ணெய் நல்லூரில் இறைவன் உமாதேவி யாருடன் காட்சி தந்து மறைந்தர்ர். "பித்தன்' என்று இறைவனைப் பழித்ததால், ' பித்தா பிறைகுடி என்றே பாடுக” என்பது இறைவன் கட்டளை. இறைவன் ஆணைப் படியே 'பித்தா பிறைசூடி' என்றெடுத்து முதற்பதிகத்தைப் பாடினார். இறைவனோடு வன்மை பேசியதால் 'வன் தொண்டன்’ என்ற பெயரும் அவருக்கு வழங்கலாயிற்று. திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும், சுந்தர ராலும் பாடப்பட்ட சிவத்தலங்கள் 275. சுந்தரர் பல சிவத் தலங்களில் ஒவ்வொரு தலத்திற்கு ஒரு பதிகமும், சில சிவத் தலங்களில் ஒவ்வொரு சிவத்தலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிகங்களும் பாடியுள்ளாரென்றும் அறிகின்றோம். - பேராசிரியர் ரெட்டியார் வன்றொண்டர் பாடிய அருட் பதிகங்களிலிருந்து ஒவ்வொரு தலத்திற்கும் உரிய ஒரரிண்டு பாடல்களையும் காட்டியுள்ளது படித்து இன்புறுவதற் குரியது. வன்றொண்டர் பல தலங்களுக்குச் சென்று வழி