பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (திரு. தே. க. சோமசுந்தரம், தலைமையாசிரியர் (ஓய்வு) தமிழக அரசினர் உயர்நிலைப் பள்ளிகள்) - தலையா சைவ சமய குரவர்கள் நால்வருள் ஒருவர் கந்தரமூர்த்தி சுவாமிகள். இப்பெரியார் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சுந்தரர் பாடிய திருத்தொண்ட தொகையையும், அவருக்குப் பிற்காலத்தே வாழ்ந்த நம்பி யாண்டார் நம்பியருளிய திருவந்தாதியையும் அடிப்படை யாகக் கொண்டு சேக்கிழார் சுவாமிகள் சுந்தரரின் வரலாற்றை விரித்துரைக்கின்றார். பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார், இந்த நூல்களையும், சுந்தரர் பாடிய திருப்பதிகங் களையும் நன்கு ஆராய்ந்து, இவ்வரலாற்றை எழுதியுள்ளார். திருக்கைலாயத்தில் ஆலாலசுந்தார் என்பவர் சிவபெரு மானுக்கு அணுக்கத் தொண்டராயிருந்தார். கமலினி, அனிந்திதை என்னும் இரு பெண்களும் உமையம்மை யாருக்குத் தொண்டு புரியும் சேடியர்கள். ஆலாலசுந்தரரின் மனம் ஒருநாள் இவ்விரு பெண்கள்பாலும் சென்றது, *தென்னாட்டிலே பிறந்து அவ்விருவரோடும் இன்பம் நுகரு வாயாக’ என்பது இறைவனது ஆணை. இவ்வானையைக் கேட்டதும் ஆலால சுந்தரர் மயங்கினார். உரிய காலத்தில் தடுத்தாட் கொள்வதாகவும் இறைவன் அருள் செய்தார். சிவபெருமான் ஆணைப்படி ஆலாலசுந்தரர் தமிழ் கூறும் நல்லுலகில், திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரிலும் கமலினி அணிந்திதையார் முறையே திருவாகுரில் பரவை நாச்சியாராகவும், திருவொற்றியூரிலே சங்கிலி நாச்சியாராக வும் பிறந்தனர். - 2