பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிேகி சமயகுரவர்கள் நால்வர். அவர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி, மாணிக்க வாசகர் என்பவர்களாவர். இவர்கள் நால்வருள் சுந்தர மூர்த்தியின் முற்பிறப்புபற்றியே நூல்களால் அறிய முடி கின்றது. அதனால் இவர்தம் வரலாறு ஏனையவர்களின் வரலாற்றைவிடச் சற்று விநோதமாகத் தோன்றும். இறைவனைத் தோழனாகக் கொண்டு இவர் ஆற்றுவித்த செயல் யாவும் அற்புதமானவை. தாயுமான அடிகளும், பித்தர் இறை என்றறிந்து பேதைபால் துtதனுப்பு வித்த தமிழ் ச் சமர்த்தர்." அன்று போற்றுவர். . திருக்கயிலாய மலையில் சிவபெருமானுக்கு அடிமைத் தொழில் புரியும் அடியார்களுள் ஒருவர் ஆலால சுந்தார் என்பவர். நாடோறும் இறைவனுக்கு அன்றலர்ந்த மலர் களைக் கொய்து மாலை தொடுத்தலும், திருநீற்றினை ஏந்தி நிற்றலுமாகிய அணுக்கத் தொண்டினை மேற்கொண்டு பணியாற்றுபவர். ஒருநாள் வழக்கம்போல் இறைவனுக்கு மலர் கொய்வதற்கு அவர் திருநந்தவனத்தைச் சார்கின்றார். ஆண்ணிலுக்கு ஊழியம் செய்யும் இவரைப் போலவே, அன்னை உமையம்மைக்குத் தொண்டு புரியும் சேடியர்கள், 1. தா. பா. எந்நாட்கண்ணி. 3: