பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o தம்பிரான் தோழர் அணிந்திதை, கமலினி என்பவர்கள் . இவர்கள் இருவரும் மலர் கொய்வதற்கு அதே நந்தவனத்திற்கு வந்து சேர் கின்றனர். இறைவன் திருவருளால் ஆலாலசுந்தரர் அவ்விரு வரையும் காண்கின்றார்; காதல் கொள்ளுகின்றார். அம் கங்கையர் இருவரும் அங்ங்ணனே ஆலாலசுந்தரரது பேரழகில் தம் மனத்தைப் பறிகொடுத்துத் தம் உள்ளத்தை அவருக்கு ஈகின்றனர்; . கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல." என்பது பொய்யாமறையாதலின் அவர்தம் அரும்புபோன்ற தெய்வக் காதல் இறையருளால் மலர்ந்து காய்த்துப் பழமா கின்றது. நந்தவனத்தில் மலர்பறிக்கும் பணியை முடித்துக் கொண்டு சிவபெருமான் சந்நியை அடைகின்றார் ஆலால சுந்தரர். அங்ங்னமே, அம்மங்கையர் இருவரும் தம்பணியை முடித்துக் கொண்டு உமையம்மையின் திருமுன் செல் கின்றனர். எல்லா உயிர்கட்கும் உயிர்க்குயிராய் உள் நின்று அருள் சுரப்பவர் இறைவனாதலால், ஆலாலசுந்தரரது உள்ளக் குறிப்பினைத் தம் முற்றறிவினால் அவர் முன்னரே உணர்ந்திருந்தார், ஆகவே தக்மிடம் வந்தவரை நோக்கி, 'சுந்தரா, நீ மாதர்பால் மனம் செலுத்தினை. ஆதலால் கர்ம பூமியாகிய பூவுலகில் தென்னாட்டுப் பகுதியில் பிறந்து மேல்லியலாராகிய அந்நங்கையர்பால் காதல் இன்பம் துய்த்து மீண்டு இங்கு வருவாயாக’ என்று பணித்தருளுகின்றார். க ண் ணு த ல ப் ப னி ன் கனிந்த உள்ளக்குறிப்பினைக் கேட்ட ஆலாலசுந்தரர் உளங்கலங்குகின்றார். தம்கைகளைத் தலைமேல் கூப்பிய கையராய் இறைவனை இறைஞ்சி நின்று, "என் ஆருயிர்த் தலைவனாகிய பெருமானே, நின்னுடைய செந்தாமரைமலர் போன்ற திருவடிகளைப் பிரிந்து வருந்து 2. குறள்-1130 (குறிப்பறிதல்)