பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கயிலாயத்தில்-ஒருநாள் 3 வதற்குத் காரணமாகிய காமத்தால் சிறுமையுற்றேன். எளியேன் மனிதப் பிறவி எடுத்து மதிமயங்குங் காலத்தில்" அடியேனைத் தடுத்தாட் கொண்டருளுதல் வேண்டும்’ என இரந்து நிற்கின்றார். வேண்டுவார் வேண்டுவதையே ஈந்தருளும் அம்மையப்பரும் அவர்தம் வேண்டுகோளுக்கு இசைந்தருளுகின்றார். இந்தப் பூவுலகில் பிறந்தாலும், 'வழுக்கி வீழினுந் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்’ (754 : 1) ‘பெட்ட னாகிலும் திருவடிப் பிழையேன் பிழைப்ப னாகிலும் திருவடிக் கடிமை (7.54 : 2) என்று சிவச் சிந்தனையிலும் சிவத்தொண்டிலும் காலங்கழிப் பதையும், சிவபெருமானையே தோழனாகக் கொண்டு உய்வதையும் இவர்தம் வரலாற்றால் அறியப்போகின்றோம். சைவசமயம் சங்கரன் தாள் அடையும் நெறிகளை சன்மார்க்கம், சகமதுர்க்கம், சற்புத்தி மார்க்கம். தாதமார்க்கம் என்று நான்காக வகுத்துப் பேசும்". இவை முறையே நன்னெறி, தோழமை நெறி, மகன்மை நெறி, தொண்டு நெறி என்றும் வழங்கப்பெறும். இவற்றிற்கு முறையே மணிவாசகர், சுந்தரர், சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோர் களை எடுத்துக்காட்டுகளாகக் கொள்வர் சைவநெறியொழு கும் பெரியார்கள். சுந்தரர் வாழ்க்கையில் தோழமை நெறி மேற்கொள்ளப்பெற்றிருத்தல் வரும் இயல்களெங்கும் பரக்கக் காணலாம். - - நம்பியாரூரரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் பெரிய புராணத்திலுள்ள தடுத்தாட்கொண்ட புராணம் (3), ஏயர் கோன் கலிக்காம நாயனார் புராணம் (29), கழழிற்றறி வார் நாயனார் புராணம் சேரமான் பெருமாள் நாயனார் புராணம்-37) வெள்ளானைச் சருக்கம் (13) (சுந்தர மூர்த்தி நாயனார்) என்ற பகுதிகள் துணை செய்கின்றன;அவர் பாடிய ஏழாம் திருமுறையால் சில அகச்சான்றுகள் அறியமுடிகின்றன. 3. சித்தியார் 8:18,