பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம் பியாரூரரின்-பிறப்பும் வளர்ப்பும் - 5. இசைஞானி சிறுவன் (7.16:11, எனத் தம்மைக் குறிப்பிடு வதிலிருந்து இவர் திருநாவலூரில் வாழ்ந்த ஆதிசைவ வேதி யர்க்கு அவர்தம் அருமை வாழ்க்கைத் துணைவியார் இசை ஞானியார் திருவயிற்றில் மகவாகத் தோன்றியவர் என்பது நன்கு தெளிவாகும். தம்முடைய திருப்பதிகங்கள் பல இடங் களிலும் தம்மை ஆரூரன்" என்று குறிப்பிடுதலை நோக்குங்: கால், இவருக்குப் பெற்றோர் இட்ட பிள்ளைத் திருநாமம். ஆரூரன் என்பது இனிது புலனாவதைக் காணலாம். இத் திருப்பெயரே இவர்தம் இயற்பெயராக வழங்கப் பெற்றது என்பதனை ஆரூரன், பேர் முடிலைத்த மன்னு புலவன்' (7.41:9) சீருரும திருவ ரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த ஆரூரன் (7.7:10:7.89:11) எனவுரும் சொற்றொடர் களால் நம்பியாரூரரே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். நம்பி என்பது ஆண்மக்களுள் அழகு, அறிவு, இளமை, செல்வம், பக்தி முதலியவற்றால் யாவரும் விரும்பிப் போற்றத்தக்க சிறப்புடையாரை வழங்கும் ப்ெய ராகும். இம்மரபினையொட்டி தவப்பெரும் செல்வராகிய - ஆருரர்க்கு "நம்பி என்ற சிறப்புப் பெயரும் உரியதாகி நம்பி யாரூரர் என்றே வழங்கப்பெறுகின்றார் - - நம்பியாரூரர் நடை கற்கத் தொடங்கித் தெருவிலே சிறு தேர் உருட்டி விளையாடும் பருவத்தில் எதிர்பாராத நிகழ்ச்சி. யொன்று நடைபெறுகின்றது: திருமுனைப்பாடி நாட்டை யாண்ட அரசர் ந.சசிங்கமுனையர் என்பார். இவர் தெருவில் நடை கற்கும் குழந்தையின் அறிவொளி திகழும் திருமகப் 3. தேவாரம் 71:10; 7.2:11, 7.3:0 முதலிய திருக் காப்புப் பாடல்களைக் காண்க. - 4. வைணவப் பெரியார்களிடையே நம்பி’ என்ற பெயர் பெருவழக்காகத் திகழ்வதைக் காணலாம். திருமலை நம்பி, பெரிய நம்பி, இளைய நம்பி, திருக் கோட்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி-என்ற பெர். கஒளத் தாண்க, -