பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தம்பிரான் தோழர் பொலிவினைக் கண்டு அதனால் சர்க்கப்பெறுகின்றார். இதனால் இவர் இக்குழந்தையின் பெற்றோராகிய சடைய ரைச் சந்தித்து நெருங்கிய நட்பின் மிகுதியால் அக். குழந்தையை வேண்டிப் பெற்றுக் தம் ೨TಶLಶ್ನಿಹಠ "இளவரசன்’ என்ற முறையில் அன்பினால் வளர்த்து வரு கின்றார். இச்செய்தி, سته - நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன் ஆதரித் தீசனுக்காட் - செயும் ஊர் அணிநாவலூரென்(று) ஓத நன்றக்க வன்றொண்டன் ஆரூரன் (7.17:1). என்ற திருக்கடைக்காப்புச் செய்யுட்பகுதியால் தெளிவாகும். இந்த நரசிங்க முனையரையரைப்பற்றியும் நாம் சிறிது அறிந்து கொள்ள வேண்டும். முனையர் என்பது முனைப் பாடி நாட்டிற்கு அரசர் என்பது பொருளாகும். நாவலூருக்கு இரண்டு கல் தொலைவிலுள்ள சேந்தமங்கலம் என்ற ஊரில் பழைய அரசர்கள் ஆண்டமைக்கு அடையாளங்கள் உள்ளன. இடிந்து போன கோட்டை மிகவும் முக்கியமானது. இங்கிருந்துதான் நரசிங்க முளையரையர் (கோப்பெருஞ் சிங்கன் என்பது வரலாற்றில் காணப்பெறும் பெயர்) ஆட்சி செய்து வந்தார் என்று தெரிகின்றது. பாழடைந்த கோட்டை ஒருகாலத்தில் இராஜதானியாக இருந்திருக்க வேண்டும். காரணம், பாழடைந்த கோட்டையைச் சுற்றிலும் கொத்தளம், அகழி காணப்பெறுகின்றன. கோட்டை வாயிலைத் தாண்டி சற்றுச் உள்ளே சென்றால், சிதைவுற்ற கருவறையும் அதனுள் ஓர் இலிங்க மூர்த்தியும் இருப்பதைக் காணலாம். இந்த நிலையிலும் இலிங்கத்திற்கு விளக்கேற்றிக் கர்ப்பூர தீபம் காண்பிப்பதற்கு வசதி செய்ய்ப் பெற்றுள்ளது. கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட இடம்தான் சேந்தமங்கலம்: