பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாரூரரின்-பிறப்பும் வளர்ப்பும் 7 இவன் சிறந்த சிவபக்தன், சிதம்பரம், திருவண்ணாமலை, விருத்தாசலம் என்ற தலத்திலுள்ள கோயில்கட்குப் பல திருப் பணிகள் செய்தவன். இவன் இசை, நாட்டியம் முதலிய நுண்கலைகளிலும் வல்லவன் என்றும் சொல்லப்பெறு கின்றது. - நம்பியாரூரர் பெருஞ் சிறப்புடன் அரசரது பேரன்புக்கு உரிய பெருஞ் செல்லப்பிள்ளையாய் வள்ர்ந்து வந்த போதி லும், தாம் பிறந்த அந்தணர் மரபுக்கேற்ப முப்புரி நூலணிந்து நான்மறைகளையும் ஆறங்கங்களும் (7 2:11, முதலாகவுள்ள சாத்திர நூல்கள், கலை நூல்கள் முதலியவற்றையெல்லாம் கற்றுத் துறை போய வித்தகராகின்றார். இதனை, பொய்யாத தமிழுரன் (7.13:11), ‘அருங்குலத் தருந்தமிழுரன். (7.72:11, நான்மறை அங்கம் ஒதிய நாவன் (7.54 ), "மன்னு:புலவன் வயல் நாவலர்கோன் செஞ்சொல் நாவன் (7.4.1:10) என்று நம்பியாரூரர் தம்மைப்பற்றிக் கூறும் திருக் கடைக்காப்புப் பாடல்களின் தொடர்களால் அறியலாம். இளம்பருவத்திலேயே தாய்மொழியாகிய தமிழிலுள்ள தொன்னூல்களையும் முறையாகப் பயின்று புலமை மிக்க வராய்த் திகழ்கின்றார் நம்பியாரூரர். ... --- இளம்பருவத்தில் கலைமகள் திருமகள் இருவர். பேரருளையும் பெற்றுத் திகழ்ந்த நம்பியாரூரர் நரசிங்க முனையரது ஆட்சியில் இளவரசராயிருந்து பழகி நாட்டு மக்களுக்கு நலம் பல புரியும் நல்லரசராய் விளங்குகின்றார். - நாடெ லாம்புகழ் நாவலூராளி நம்பிவன்றொண்டன் (7.64:11) என்ற குறிப்பினால் இச்செய்திநன்கு அறியப்படும். இன்னும்: வேந்தராய் உலகாண்டு அறம்புரிந்து வீற்றிருந்த இவ்வுடல் (7 64:6) என்று தமது உடம்பைச் சுட்டும் மொழியினாலும் இது மேலும் தெளியப்படும்.