பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தடுத்தாட் கொள்ளப் பெற்ற வரலாறு திருமுனைப் பாடி நாட்டு இளவரசராய்த் திகழ்ந்த நம்பியாரூரருக்கு மணப்பருவம் எய்துகின்றது. பெற்றோர்கள் தம் மைந்தனுக்குத் திருமணம் புரிய வேண்டும் என்று சிந்திக் கின்றனர். தங்கள் குடும்பத்தோடு ஒத்த குடும்பத்தினராய்ப் அத்துவில் வாழும் சடங்கவி சிவாசாரியாரின் திருமகளை ம்.ண்மகளாக உறுதி செய்கின்றனர்; அவரும் தம் மகளைத் தருவதற்கு ஒப்புக் கொள்ளுகின்றார். திருமணத்தைப் அத்துரில் நிகழ்த்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. திருமண நாளின் முதல் நாளன்று நம்பியாரூரருக்குக் காப்பணிதல் முதலிய மங்கலச் சடங்குகள் மறை முறைப்படி நடத்தப்பெறுகின்றன. மறுநாள் வைகறைப் பொழுதில் துயிலுணர்ந்தெழுந்த நம்பியாரூரர் தமக்குரிய நாட்கடன் களை முடித்த பிறகு நீராடுகின்றார். தாம் பிறந்த இடத்து வைதிகத் திருவும் புகுந்த இடத்து மன்னவர் திருவும் பொலியத் திருமணக்கோலங் கொள்ளுகின்றார். கண்ணு தலப்பனின் கழலடிகளை தம் நெஞ்சத்து நிறுத்தித் திருவெண்ணிது அணிந்து மங்கல வாத்திய ஒலிகள் முழங்கக் குதிரைமீது அமர்ந்து நண்பர்களும் உறவினர்களும் புடை 1. இந்த ஊர் முன்பு மனம் வந்த புத்தூர் என்று. வழங்கி வந்தது. இது திரிந்த மண்ம் தவிர்ந்த புத்துனர் என்று மாறியது. இப்போது அப்பகுதி மக்கள் 'மன மந்த புத்துக் என்று வழங்குகின்றனர்.