பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பரவையார் திருமணமும் இல்வாழ்க்கையும் திருக்கயிலாய மலையில் உமையம்மையின் சேடியர் ஆளாய் ஆலாலசுந்தரால் காதலிக்கப்பெற்ற மகளிர் ఇGGళ ஒருவர் கமலினியார் என்பதை நாம் அறிவோம். இவர் திருவாரூரில் உருத்திரகணிகையர் குலத்தில் பிறந்து காவையார் என்ற திருதாமம் பெற்று வளர்ந்துவருகின்றார். திருமகனையொத்த பேரழகுடைய இவர் மங்கைப் பருவம், அடைகின்றார். உமையம்மையாருடைய பாங்கியருள் ஒரு ஆராய்த் திருத்தொண்டு புரிந்த முன்னைய உணர்வு பரவை பாரின் உள்ளத்திலிருந்து உந்துதலால் இந்நங்கையார் பூங் கோயில் அமர்ந்த பெருமானை நாடோறும் வழிபட்டு வரும் கடமையை உடையவராய்த் திகழ்கின்றார். - - வழக்கம்போல் பரவையார் திருக்கோயில் வழிபாட்டிற் குச் சென்றுவரும் நாட்களில் ஒருநாள் நம்பியாரூரர் நல்லுர ஒாகிய இறைவனது திருவருளால் பரவையாரைக் காண நேர்கின்றது. பரவையாரும் அவ்வாறே பாலது ஆணையால்: நம்பியாரூரைக்கண்டு காதல் கொள்ளுகின்றார். அளவிறந்த காதலால் அவர்தம் உள்ளத்தே நிறைந்திருந்த மகளிர்க்குரிய தானம் மடம் அச்சம் பயிர்ப்பு நான்கு குணங்களும் புனலொடுபுல் சாய்ந்தாற்போல ஒருபுடைச் சாய்கின்றன. ஆயினும், இறைவனைத் தொழும் அன்பே அவர் தம் உள்ளத்தை நிறைவுடையதாக்கியதால். அவர் இறைவன் திருமுன்னர் வந்து சேர்கின்றார். --