பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தம்பிரான் தோழர் பரவையாரது பேரழகில் ஈடுபட்ட நம்பியாரூரர் தம் அருகில் நின்றவர்களை நோக்கி, "என் மனங்கவர்ந்த செங் கனிவாய் இளங்கொடி யார்?' என்று வினவ, அவர்கள், "அவர் நங்கை பரவையார்; வானோர்க்கும் தொடர்வரிய தூய்மையுடையார்” எனக் கூறுகின்றனர். பரவையார்பால் எல்லையற்ற காதலுடையராகிய தம்பிரான் தோழர் ‘என்னை ஆட்கொண்ட இறைவனை யடைந்து எனது கருத்திற்கு இசைவு பெறுவேன்' என்று எண்ணம் கொண்டு புற்றிடங்கொண்ட பெருமான்முன்செல்கின்றார். அப்போது தங்கை பரவையாரும் இறைவனை வலம் வந்து பிறிதொரு பக்கமாகப்போகின்றார். நம்பிஆரூரர் தமக்குப் பரவையாரை வாழ்க்கைத் துணைவியாகத் தந்தருளும்படி ஆராத காத லுடன் பணிந்து வேண்டுகின்றார். “இறைவன் பால் ஆப் பதித்த என்னுள்ளத்தைச் சலனப்படுத்திய இந்நங்கை எவ்வழி ஏகினாள்?’ என்று கூறிக் கொண்டே பரவையைத் தேடிச் செல்லுகின்றார். எம்பெருமான் தம்மால் காதலிக்கப் பெற்ற பரவையாரைத் தமக்குத் தந்து தம் ஆவியை நல்குவர் என்னும் நம்பிக்கையுடன் தேவாசிரிய மண்டபத்தின் ஒரு பக்கமாக அமர்த்திருக்கின்றார். > தம்பிரான் தோழரின் நிலை இங்ஙனமாக, பூங்கோயில மர்ந்த பெருமானை வணங்கித் தம் இல்லம் மீண்ட பரவை யார் மலரமளியில் அமர்ந்து தம் அருகிலிருந்த பாங்கியை நோக்கி, நாம் ஆரூர்ப் பெருமானை வழிபடச் சென்ற பொழுது நம் எதிரே வந்த இளைஞர் யார்?' என்று வினவ , அவளும், மாலும் அயனும் காண்டற்கரிய சிவபெருமான் மறையவராகி வந்து தடுத்தாட்கொள்ளப் பெற்ற தம்பிரான் தோழர் நம்பியாரூரர் இவரே" என விடை பகர்கின்றாள். இதனை அறிந்த அவளுடைய காதல் பெருகி வளர்கின்றது. படுக்கையில் வீழ்ந்து புரண்டு புரண்டு வெதுப்புற்று பலவாறு ஏங்கி வருந்துகின்றார். ". . . . . . . . . .