பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையார் திருமணமும் இல்வாழ்க்கையும் 33 இவ்வாறு இருவரும் ஒருவர்மேல் மற்றவர் கொண்ட பெருங்காதலால் உறக்கமின்றி நள்ளிரவில் வருந்துதலைக் கண்ட புற்றிடங்கொண்ட பெருமான் அன்றிரவே சிவனடி யார்கள்முன் தோன்றிப் பரவையாரை நம்பியாசரருக்கு, திருமணம் செய்து வைக்குமாறு பணித்தருளுகின்றார்.அடுத்து நம்பியாரூரை அடைந்து "நங்கை பரவைகை நினக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தந்தோம். நம் அடியார்கட்கும். இதனைத் தெரிவித்துள்ளோம்” என்று அருளிச் செய்தவர், பரவையார் முன்னிலையில் தோன்றி நினக்கும் நம்பி யாருரனுக்கும் நாளை திருமணம் நிகழும்" எனக் கூறி மறைந்தருளுகின்றார். - மறுநாள் வைகறையில் பூங்கோயிலமர்ந்த பெருமான் ஆணையிட்டபடி சிவனடியார்கள் அனைவரும் ஒருங்கு கூடி. இறைவனது திருவருட்டிறத்தை வியந்து போற்றுகின்றனர். தம்பிரான் தோழர்க்கும் நங்கை பரவையார்க்கும் விதிப்படி திருமணத்தை நிகழ்விக்கின்றனர். இவ்வாறு இறையருளால் பரவையாரை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற தம்பிரான் தோழர் அம்மெல்லியலாருடன் அன்புடன் கலந்து மகிழும் நிலையிலேயே சிவனருட்கடலிலும் மூழ்கித் திளைக்கின்றார். இந்த இன்பப் பெருக்கில் செந்தமிழ்ப் பாமாலைகள் பாடிச் சிவபெருமானைப் போற்றுகின்றார். நங்கை பரவையாரை வாழ்க்கைத் துணைவியாகத் தந்தருளிய திருவருட் செயலை, ‘. ஏழிசையாய் யிசைப்பயனாய் இன்னமுதா யென்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்குடாைகி மாழையொண்கண் பரவையைத் தந் . தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் . . 3 என்ஆருர் இறைவனையே (7.5:40ர் த- . .