பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - தம்பிரான் தோழர் ఫ్లీ 经历 o .گیا 兹 ", "ξεπ ή என்று நாவலூர் அண்ணல் உளங்கசிந்து பரவிப் காற்றி யுள்ளமையைக் கண்டு மகிழலாம். திருத்தொண்டத் தொகை: நம்பியாரூரர் பரவையாருடன் இக்லறம் நடத்தி இறைவனை வழிபட்டு வரும் நாட்களில் ஒரு நாள் தேவாசிரிய மண்டபத்தில் ஒருங்கு கூடியுள்ள சிவனடியார்களைக் கண்டு 'இவர்கட்கு அடியனாகும் நாள் எந்நாளோ?' என்னும் நினைவுடையவராய் வழிபாட்டிற் காகத் திருக்கோயிலினுட் செல்லுகின்றார். இந்நிலுையில் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவனடியார்களில் ஒருவராகிய விறன்மிண்டர் வன்றொண்டர் அடியார் திருக் கூட்டத்தைப் பணியாது நேரே திருக்கோயிலுக்குச் செல்கின் றார் என்று கருதி 'சிவனடியார் கூட்டம் தம்மைப் பேணாது செல்லும் நம்பியாருரனுக்கும் புறம்பு ஆவனுக்குப் பிரானாகிய சிவபெருமானுக்கும் புறம்பு’’ என்று வெகுண் டுரைக்கின்றார். இந்நிலையில் 'அடியவர்க்கு அடியனாவேன்' என்னும் ஆர்வத்துடன் திருக்கோயிலினுட் செல்லும் வன்றொண்டர் முன் ஆரூர் இறைவன் தோன்றிக் காட்சி நல்குகின்றார். வன்றொண்டரும் தமக்கு எளி வந்து அருளிய இறைவனின் பெருங்கருணைத் திறத்தை வியந்து போற்றுகின்றார்: தொண்டர்க்குத் தொண்டனாகும் நற்பேற்றினை ஆரூரருக்கு அளித்தருளத் திருவுளங் கொள்ளுகின்றார். அவருக்கு அடியார்களின் திருத்தொண்டின் திறத்தையும் சால்பினை யும் அறிவுறுத்தருளுகின்றார். அவரை நோக்கி 'நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறைசொன்மாலை பாடிப் போற்றுவாயாக' என்று வணிக்கின்றார். அப்பணியினை 4. இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். 5. பெ. பு: விறன் மிண்டர் 7,8