பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையார் திருமணமும் இல்வாழ்க்கையும் - 35 ஏற்றுக்கொண்ட வன்றொண்டர் இறைவனை இறைஞ்சி நின்று, “பிரானே, மெய்யடியார்களின் வரலாறு அறியேன்: அவர்தம் பெருந்தகைமையையும் உணரேன். இந்நிலையில் எங்ங்ணம் பாடுவேன்?' என்று விண்ணப்பிக்க, அம்மை யப்பரும், - தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் (7.39, என்று அடியெடுத்துக் கொடுத்து மறைந்தருளுகின்றார். நம்பியாரூரரும் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் அடியார்களை நெடுந்துரத்திலேயே கண்டு தாழ்ந்து இறைஞ்சுகின்றார்; அவர்தம் திருப்பெயரை முறையே எடுத்தோதுகின்றார். அவர்கள் எல்லார்க்கும் தனித்தனியே ‘அடியேன்” எனப் பணிமொழி பகர்ந்து, - தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன், திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் , இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்: - இளையான்றன் குடிமாற னடியார்க்கும் அடிவேன்; வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் - . கடி:ேன்; அல்விமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்: - ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (1) என்று முதல் திருப்பாடலாக வரும் திருப்பதிகத்தினைப் (1.39) போற்றித் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார் உளம் மகிழ் அவர்களின் நடுவே சென்று சேர் கின்றார். இதனைச் சற்று விரித்து நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி அருளுகின்றார். இந்த