பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தம்பிரான் தோழர் இரண்டினையும் மேலும் விரித்து திருத்தொண்டர்புசானம் என்ற பெரிய புராணத்தைச் சேக்கிழார் பெருமான் அருளி சைவ உலகத்தை வாழ வைக்கின்றார். - குண்டையூர்க் கிழவர் : நம்பியாரூரரின் குடும்பத்திற்குத் தேவையான செந்நெல் பருப்பு முதலிய உணவுப் பொருள் களைக் குண்டையூர்க் கிழவர் என்னும் வேளாளர் அன்புடன் அனுப்பிக் கொண்டிருக்கின்றார். இப்பணி இடையறாது தடை பெற்றுக் கொண்டு வருகின்றது. ஒருசமயம் மழையின்மையால் நாட்டில் வற்கடம் உண்டாகின்றது. இப்பஞ்சம் குண்டையூர்க் கிழவரையும் தாக்குகின்றது. நாவலூராருக்கு நெல் அனுப்ப முடியவில்லையே என்று பெருங்கவலை கொள்ளுகின்றார். அன்று உண்ணாநோன்பினை மேற்கொண்டு ஆயர்ந்து துயில் கின்றார். சிவபெருமான் அவரது கனவில் தோன்றி நம்பி பாரூரர்பொருட்டு நுமக்கு நெல்லைத் த ந்தோம்" என்று உரைத்துக் குபேரணை ஏவுகின்றார். அவன் குண்டையூர் முழுவதும் நெல் மலையாகக் குவித்திடச் செய்கின்றான். வைகறையில் விழித்தெழுந்த குண்டையூர்க் கிழவர் மலை போலும் தெற்குவியலைக் கண்டு வியப்புற்று இறைவன் கருணைத் திறத்தைப் போற்றுகின்றார். இந்நெற் குவியலை வன்றொண்டரிடம் சேர்ப்பிக்கும் வழி காண்பான் வேண்டி திருவாரூரை நோக்கி நடக்கின்றார். தம் பொருட்டுக் குண்டையூர்க் கிழவருக்கு நெல் அளித்த செய்தியை இறைவ னால் அறிந்த நம்பியாருரர் குண்டையூரை நோக்கி நடக் கின்றார். வழியில் இருவருக்கும் சந்திப்பு நேர்கின்றது. இரு வரும் குண்டையூர் வந்து சேர்கின்றனர். . விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினைக் கண்ட் தம்பிரான் தோழர் இறைவன் திருவருளை எண்ணி வியக் கின்றார். இதனைத் திருவாரூரில் சேர்ப்பிக்க சிவபெருமான் ளைத் தந்தாலன்றித் தம்மால் இயலாது என நினைத்து