பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(1) 43. உணர்வுடையதாகி இருக்கின்றது: அஃது ஏனைய நான்கு பொறிகளின் ஆற்றலையும் பெற்று மூர்த்தியின்பால் பதிகின்றது. அங்கே பலவகை ஒவிகள் இருந்தும் அவர் காதில் விழவில்லை. மணம் இருந்தும் அவர் மூக்கு உணரவில்லை. வாயும் உணர்வுடைதாகத் தோன்றவில்லை. கண் ஒன்றே கூத்தன் அழகை விழுகுகின்றது. அகக் கரணமாகிய மனம், அஃதாவது அந்தக்கரணம், எவ்வாறு இருந்தது ?அந்தக் கரணம் ஒன்றாயினும், செயல்களால் நான்கு பகுதியாகக் கூறப்பெறுகின்றது. அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை. மனம் ஒன்றை நினைக்கும்; அதனால் சலிப்படை யும்: பிறகு எங்கும் சென்று தாவும். புத்தியோ பொருளை “இத்தகையது அத்தகையது என்று வேறு பிரித்தறியும். சித்தம் இது செய்யவேண்டும் என்ற உறுதி பூணும். அகங் காரம் என்பது எப்பொழுதும் தான் இன்னான் என்ற உணர் வுடன் இருப்பது. இந்த நான்கிலும் ஒருமைப்பாடாகிய உறுதியைப் பெறும் பகுதியே சித்தம் ஆகும். அதைச் சிந்தை எனவும் வழங்கலாம். திருக்கூத்தனுடைய காட்சியில் ஒன்றி நிற்கும் சுந்தரமூர்த்தியின் அந்தக்கரணத்தின் நான்கு கூறு களில் மூன்று செயற்படவில்லை. மனம் வேறொன்றையும் நினைக்காமல் அடங்க, புத்தி ஆராயும் உணர்வில் ஒடுங்க, அகங்காரம் தான் இன்னான் என்று உணரும் ஆற்றலை இழக்க, சிந்தை மட்டிலும் கண்ணால் காணும் காட்சியில் தோய்ந்து நிற்கின்றது. மனிதர்கள் முக்குண வயத்தர்கள். அக்குணங்கள் சாத்து விகம், இராசதம், தாமதம் என்பவையாகும். சாத்துவிகம் அன்போடமைந்திருப்பது; இராசதம் மிடுக்கும் படபடப்பும் உடையது. தாமதம் இழிந்த செயலைச் செய்வதற்கு மூல காரணமாக இருப்பது. மனத்தின் இம் முக்குணங்களும் விரவியே உள்ளன. சிலருக்குத் தாமத குணம் விஞ்சியும், மற்றும் சிலருக்கு இராசத குணம் மிகுந்தும், இன்னும் சிலருக்குச் சத்துவ குணம் அதிகப்பட்டும் இருக்கும். சத்துவ