பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - தம்பிரான் தோழர் இந்நகரின் புறத்தே அமைந்த தண்ணிழல் தரும் சோலை களையும் நறுமணம் மிக்க நந்தவனங்களையும் மதிலைச் சூழ்ந்து விளங்கும் கிடங்குகளையும் கடந்து வடதிசை வாயில் வழியாக தில்லை நகரினுள் புகுந்து சிவனடியார்கள் எதிர் கொண்டு போற்ற அழகிய திருவீதியினை வணங்கி வலம் வருகின்றார். தில்லைச் சிற்றம்பலவன் வழிபாடு : ஞான மயமான திருச்சிற்றம்பலத்தின் முன்னே புள்ள திருவணுக்கன் திருவா விலை நெருங்கி மன்றுள்ளே திருவருட் கூத்தியற்றும் கூத்தப் பெருமானைக் கண்டு அன்பு மீதுரத் தலைமீது கூப்பிய கையினராய்த் திருக்களிற்றுப்படியின் மருங்கே வீழ்ந்து வணங்குகின்றார். அவன் அருட்கூத்தில் மலர்ந்த பேரின்ப வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், ஐந்துபே ரற வும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் . திருந்துசாத் துவிகம்ே ஆக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்." என்று காட்டுவர். கூத்தப்பெருமானுக்கு முன்னால் நிற்கும் போது நம்பியாரூரரின் ஐந்து பொறிகளில் கண் ஒன்றே போன்றது. 2180) தங்க ஓடுகளால் ஆகியது. ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 24 மணிநேரம் கொண்ட ஒரு நாளுக்கு 21600 மூச்சு ஆகின்றது. இதுதான் தங்க ஓடுகளின் மொத்த எண்ணிக்கை. இன்னும் இவ்வாறு இக்கோயிலமைப்புக்குப் பல - தித்துவங்கள் கூறப்பெறும். 2. பெ.பு : தடுத்தாட்கொண்ட 105.