பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(1) சோழநாட்டுத் திருத்தலங்கள் 190. இவ ற் றுள் தம்பிரான் தோழர் வழிiபட்டவை 47. அதிகமான எண்ணிக் கையில் திருத்தலங்களையுடைய இந்நாட்டுத் திருத்தலப் பயணம் பல நிலைகளில் நடைபெறுகின்றது. இதனை நிரலே எடுத்துக் காட்டுவோம். * . - முதல்நிலை : இறைவனால் திருவெண்ணெய் நல்லூரில் தடுத்தாட்கொண்ட பிறகு நடுநாட்டுத் தலங்கள் சில வற்றைச் சேவித்துக் கொண்டு திருத்தில்லை வருகின்றார். 1. கோயில் (சிதம்பரம்). கோயில்’ என்ற பெயரால் சைவர்கள் வழங்குவர் வைணவர்கள் திருவரங்கத் தைக் கோயில் என்று வழங்குவது போல மிகப் பழையகாலத்தில் இது தில்லைவனமாயிருந்தது. இக்கோயிலில் ஐந்துசபைகள் உள்ளன. அவை : (1) நடராசப் பெருமான் திருநடம் புரிவும் சிற்றம்பலம் அல்லது சிற்சபை, (2)சிற்சபைக் கெதிரிலுள்ள கனக சபை (பொன்னம்பலம்), இங்கு நாடோறும் படிக லிங்கத்திற்கு ஆறு கால பூசை நடைபெறுகின்றது: (3) அடுத்தது நிருத்தசபை; இது நடராசருக்கெதிரி லுள்ள திருக்கொடிமரத்திற்குச் சிறிது தெற்கி லுள்ளது. இங்கு ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைக் இற்சிலை வடிவில் சேவிக்கலாம்; (41 தேவசபை (பேரம்பலம்); யாகசாலைக்கருகில் ஈசான மூலையில் உள்ளது. இது பஞ்ச மூர்த்திகள் இருக்குமிடம்: (5) இராசசபை (ஆயிரக்கால் மண்டபம்); சிற்றம்பலத் தின் மேலுள்ள தாபி ஏனைய தலங்களில் உள்ளது போன்றதன்று சாதாரண வீடுகளுக்குள்ள கூரை