பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தம்பிரான் தோழர் நாக்கொண்டு மானிடம் பாடேன்' என்ற திருமழிசையார் திருவாக்கையும், சொன்னால் விரோதம்இது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ என்நாவில் இன்கலி யான் ஒரு வர்க்கும் கொடுக்கிலேன்' என்ற திருவாய்மொழியால் மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் என்ற நம்மாழ்வார் திருவாக்கினையும் நினைக்கச் செய்கின்றது. நம்பியாரூரன் கருத்தறிந்து அவர் வேண்டிய பொன்னை விரைந்தளித்தமையால் எதிரிலின்பம் இம்மையே தருவர்' என்ற புகலூர் பெருமானைப் பாராட்டிப் போற்றுவர் சேக்கிழார் அடிகள். திருப்புகலூர் இறைவன் அளித்த பொற்கட்டிகளை எடுத்துக்கொண்டு அடியார்களுடன் அங்கிருந்து புறப்பட்ட தம்பிரான் தோழர் திருப்பனையூர் புறத்தே வந்து கொண்டிருக்கும்பொழுது அப்பதி இறைவனை ஆடல்காட்டி அருள் புரிகின்றான். அந்த அழகிய காட்சியைக் கண்டு மகிழ்ந்த நம்பியாரூரர், - அரங்கி லாட வல்லார் அவரே அழகியரே. (7.87:7) என்று பாடல்தோறும் புகழும் மாடமாளிகை’ (7:87) என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடித் திருவாரூரை அடைகின்றார். அங்குக்கோயில் கொண்டிருக்கும் இறை வனை நாளும் பணிந்து பரவையாருடன் இனிது மகிழ்ந்து வாழ்க்கை நடத்துகின்றார். 12. நான்முகன் திரு. 75 - - - - - 13. திருவாய் 3.9:1 ದಿ : ஏயர்கோன் - 52 * , 5. பனையூர் (திருப்பனையூர்}: நன்னிலத்திலிருந்து 1; கல் தொலைவிலுள்ளது. த்திலிருந்து 1;