பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(1) 4? கண்ணில்ஆ னந்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப் பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பர்டினார் பரவினார் பணிந்தார்’ என்று காட்டுகின்றார். இந்நிலையில் சிற்றம்பலவன் திருவருளால் நீ ஆரூரில் நம்பால் வருக' என்ற திருவருள் மொழி வானில் எழு கின்றது. இந்த அருளாணையைச் சிரமேற்கொண்டு அம்பல வனைத் தொழுது (பதிகம் இல்லை) விடைபெற்றுத் தென் திசை வாயிலாக திருவாரூர் நோக்கிப் புறப்படுகின்றார். கழுமலத்தில் கடவுனை போற்றுதல் நம்பியாரூரர் கொள்ளிட நதியைக் கடந்து கழுமலம் என்னும் கோழிப்' பதியை அடைகின்றார் (முதல் முறை வருகை). உமையம்மை யின் முலைப் பாலுண்டு வளர்ந்து தமிழ்ப் பாடியருளிய ஞான சம்பந்தப் பெருமான் பிறந்தருளிய தனிச் சிறப்பும் தூய்மை யும் உடையது சீகாழிப்பதி. அத்திருத்தலத்தைத் தம் காலடி களால் மிதித்தல் கூடாது எனக் கருதிய நாவலூரர். அந்நகரத்தின் புற எல்லையை வணங்கி அத்திருப்பதியை வலம் வருகின்றார். அடியவர்கள்பால் ஆரூரர் கொண்ட அன்பின் திறத்தை உணர்ந்து மகிழ்கின்றார் காழிப் பெருமான். உடனே அவருக்கு எதிரே விடைமீது அம்மை யப்பராகத் தோன்றிக் காட்சி தருகின்றார். அத் தெய்வத் திருக்கோலத்தைக் கண்டுகளித்த நம்பியாரூரரின் திரு வுள்ளத்தில், - சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தவெத் தலைவனை மலையின் மாதினை மதித்தங் கோர் பால்கொண்ட மணியை வருபுனல் சடையிடை வைத்தவெம் மானை 3. பெ.பு: தடுத்தாட்கொண்ட - 107. 4. கழுமலம் (சீகாழி) - சிதம்பரத்திற்குத் தெற்கில் இருப்பூர்திப் பாதையில் ஒரு நிலையம். இது மூவர் தேவாரம் 71 பதிகங்களைப் பெற்றது,