பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தம்பிரான் தோழர் o ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை ஒருவனை எங்கள் பிரானைக் காதில்வெண் குழையனைக் கடல்கொளமிதந்த கழுமல வளநகர் கண்டு கொண்டேனே. () என்று முதற்பாடலாக வரும் திருப்பதிகம் (7.58) பிறந்து நம்மை உய்விக்கின்றது. காழிப்பெருமானின் காட்சியில் களித்த ஆரூரர் தம் களிப்பினை, கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே' என்று பாடல்தோறும் ஒருமுறைக்கு ஒன்பது முறை கூறிப் புலப்படுத்துகின்றார். கயிலையில் வீற்றிருக்கும்' நிலையில் கண்ணுதலப்பன் காட்சி கொடுத்ததாக அறிகின் றோம். - தம்பிான் தோழர் : கழுமல நாதனைக் கண்டுகளித்த நம்பியாரூரர் திருக்கோலக்கா" (முதல்முறை வருகை) திருப்புன்கூர்" (முதல் முறை வருகை) முதலிய திருத்தலங் களை வழிபட்டுச் செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாடிப் போற்றுகின்றார். பின் காவிரி நதியில் நீராடி மயிலாடுதுறை" 5. கோலக்கா : சீகாழியருகில் உள்ளது. இத்தலத்து ஈசன் சம்பந்தருக்கு ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற்றாளங்கள் இரண்டைத் தந்தான். அம்பிகை தாளங்கட்கு ஒசை தந்தாள் (7.62) е ழ்டின் கூர்: இத்தலம் வைத்தீசுவரன் கோயிலி லிருந்து 2 கல் தொலைவிலுள்ளது (7.55). திருநாளைப்போவாருக்குத் தேர்நிலையிலிருந்தே காட்சி தத்ததலம். 7. மயிலாடுதுறை : மாயூரம் டவுன் இருப்பூர்தி நிலை யத்திலிருந்து கல்தொலைவு. மாயூரம் சந்திப்பி விருந்தும் போகலாம். உமையம்மையார் மயில் உருவில் இறைவனை வழிபட்டதலம். காவிரியாற் றின் தென் கலையிலுள்ளது. ஐப்பசி முழுவதும் இங்குத் துலாமுழுக்குச் சிறப்புடையது. கடைசி நாளன்று தி ரு மு. மு. க் கு மிகச்சிறப்புடையது. கார்த்திகை முதல் நாள் முடவன் முழுக்கு,