பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(1) 49. (முதல்முறை வருகை) அம்பர் மாகாளம், திருப்புகலூர் இதில் முன் வருகை) ஆகிய தலங்களை வழிபட்டுத் திருவா ரூரை அடைகின்றார் (அனைத்திலும் இம்முறைப் பயணத்தில் பதிகம் இல்லை). இவர் வருவதற்கு முன்னர் திருவாரூர் இறைவன் அவ்வூரில் வாழும் அடியார்கள்முன் தோன்றி 'நம் வன்றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான். நீங்கள் அவனுக்கு நன்முறையில் வரவேற்பு நல்குவீர்களாக" என்று கூறி மறைந்தருள்கின்றார். அங்ங்னமே, அடியார்களும் நகர மாந்தரும் திருவாரூரை விழாக்கோலம் கொள்ளச் செய்து மங்கல வாத்தியங்கள் முழங்க ஆரூரரைத் திருமதில் வாயில் புறத்துச் சென்று எதிர் கொண்டு வணங்குகின்றனர். நம்பியாரூரரும் தம்மை எதிர் கொண்டழைத்த அடியார் களைக் கைகூப்பி வணங்கி, "எந்தை இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர் என வினவி வேண்டும் குறிப்புடன், X- . 8. அம்பர் மாகாளம் மயிலாடுதுறை-காரைக்குடி இருப் பூர்தி வழியில் பூந்தோட்டம் என்ற நிலையத்தி லிருந்து கல்தொலைவு, அம்பர் மாகாளம், அம்பர் பெருந்திருக்கோயில் அடுத்தடுத்து 6 - பர்லாங் தொலைவில் உள்ளன. அம்பர் என்ற திருத்தலம் சோமாசிமாற நாயனார் என்ற அந்தணர் வாழ்ந்து வந்த இடம். இங்கு வைகாசி ஆயிலியத்தின்று சோமவாசி யாக உற்சவம் சிறப்பாக நடைபெறும். அரனும் உமையும் புலையன் புலைச்சி உருவில் வேள்விச்சாலைக் கெழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்கும் முறையில் உற்சவம் சிறப்பாக நடைபெறு கின்றது (பெரிய புராணத்தில் இது கூறப்பெற வில்லை). துருவாச முனிவர் ஆசியால் மதலோலா என்றதேவகன்னிகைக்குப் பிறந்த அம்பரன்,அம்பன் என்ற அசுர அம்சம் உடையவர்கள் வாழ்ந்த இடம். திருமால் காளியைத் துணைகொண்டு இருவரை யும் கொன்று விடுகின்றார். வேங்கடம் முதல் குமரி வ்ரையிலே - பொன்னியின் மடியிலே - 20வது கட்டுரையில் விவரம் காண்க.) - .